சென்னை சூப்பர் கிங்ஸ் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார். தற்போது நடைபெற்று வரும் 2022 ஆம் ஆண்டு தொடரே தனது கடைசி தொடராக இருக்கும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால், அந்த ட்வீட்டை பதிவிட்ட சில நிமிடங்களில் அவர் அதை நீக்கிவிட்டார். ராயுடு தனது ஐபிஎல் வாழ்க்கையில் இரண்டு அணிகளுக்காக மட்டுமே விளையாடியுள்ளார். முதலில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய அவர் 2018-ல் CSK-ல் சேர்ந்தார்.
மேலும் படிக்க | அடுத்த விராட் கோலி இவர் தான் - ரோகித்சர்மா கூறும் வீரர் யார்?
ராயுடு 2010-ல் மும்பை இந்தியன் அணியில் தனது ஐபிஎல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் 2017 வரை மும்பை அணிக்காக விளையாடி வந்தார். 2018 மெகா ஏலத்தில், அவர் சென்னை சூப்பர் கிங்ஸால் ரூபாய் 6.75 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதன் பின்பு சென்னை அணியின் முக்கிய வீரராக இருந்து வருகிறார். ஐபிஎல்லில் அவரது சாதனையைப் பொறுத்தவரை, ராயுடு பல ஆண்டுகளாக மிகவும் நிலையான ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். அவர் லீக்கில் மொத்தம் 187 போட்டிகளில் விளையாடி 29.28 சராசரியில் 4187 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த ஆண்டும் கூட, சூப்பர் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்கள் எடுத்தவர்களில் ராயுடுவும் ஒருவர். பிளேஆஃப் இருந்து அந்த அணி ஏற்கனவே வெளியேறினாலும், இந்த சீசனில் 12 போட்டிகளில் 27.10 சராசரியுடன் 271 ரன்கள் எடுத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் ராயுடு 27.16 சராசரியில் 2416 ரன்கள் எடுத்தார். MIக்காக அவர் 14 சதங்களை அடித்துள்ளார். சிஎஸ்கே அணிக்காக ராயுடு 32.80 சராசரியில் 1771 ரன்கள் எடுத்தார். அவர் சென்னை அணிக்காக 8 அரைசதங்கள் மற்றும் ஒரு சதம் அடித்துள்ளார். ராயுடு கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை. அவர் கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணிக்காக இடம்பெற்றிருந்தார். தற்போது ஒய்வு பெறுவதாக அறிவித்து அதனை மறுத்து இருப்பதால் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் படிக்க | பிறந்தநாளில் சிஎஸ்கேவுக்கு எதிராக பொல்லார்டு விளையாடாதது ஏன்? பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR