சென்னை: ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணியின் 200வது போட்டியில் கேப்டனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணித்தலைவர் எம்எஸ் தோனிக்கு அனைவரும் கரகோஷத்துடன் பாராட்டுகளை வழங்கினார்கள். சிறப்பு ‘கௌரவக் காவலர்’ என்ற பட்டமும் தோனிக்கு வழங்கப்பட்டது. இன்று சென்னையில் உள்ள MA சிதம்பரம் ஸ்டேடியத்தில் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் அன்பான வரவேற்பைப் பெற்ற தோனி, இந்தியன் பிரீமியர் லீக்கில் 2008 சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று எதிர்கொள்கிறார்.
41 வயதான தோனி, ஐபிஎல்லில் தனது இறுதி சீசனில் விளையாடுவார் என்று கூறப்படுகிறது, ஆனால் அதற்கு முன்னதாகவே அவரது வெற்றி மகுடத்தில் உள்ள மயிலிறகுகளின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் அவர் தொடர்ந்து பல சாதனைகளை முறியடிப்பார் என்று அனைவரும் மகேந்திர சிங் தோனிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
சிஎஸ்கேவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவில், தோனிக்கு வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்களுடன் அனைத்து உரிமையாளர்களின் உயரதிகாரிகளும் தோனிக்கு மரியாதை செலுத்துவதைக் காண முடிந்தது.
இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு நினைவுச்சின்னம் வழங்கப்பட்டபோது, உரிமையின் முதன்மை உரிமையாளரான என். சீனிவாசனை நோக்கி தோனி நடந்து செல்வதை வீடியோவில் காணலாம்.
Mr N Srinivasan, former Chairman of the ICC, former President of BCCI and TNCA, Mrs. Chitra Srinivasan and Mrs Rupa Gurunath present @msdhoni with a special memento commemorating the very special 200th #TATAIPL | #CSKvRR | @ChennaiIPL pic.twitter.com/nixs6qsq2P
— IndianPremierLeague (@IPL) April 12, 2023
முன்னாள் இந்திய தலைமை பயிற்சியாளரும், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளருமான ரவி சாஸ்திரியும், தோனி 200வது கேப்டனாக களம் இறங்குவதற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு என். சீனிவாசனை நோக்கிச் சென்ற தோனியை கைத்தட்டி அனைவரும் வரவேற்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளும் நல்ல ஃபார்மில் உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விளையாடிய 3 போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.
புள்ளி பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் லக்னோ அணி உள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணி, நடப்பு ஐபிஎல் போட்டித்தொடரில் ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐந்தாவது ஐபிஎல் பட்டத்தை வெல்லும் நோக்கத்தில் விளையாடுகிரது.
மஞ்சள் ஆர்மி கடைசியாக 2021 இல் போட்டியை வென்றது, அதே நேரத்தில் தோனி இந்த முறை போட்டியை வென்றால் ஐபிஎல் கேப்டனாக வென்ற ரோஹித் ஷர்மாவை சமன் செய்துவிடுவார் தோனி.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ