சிஎஸ்கே ரசிகர்கள் குஷியோ குஷி! பார்மிற்கு வந்த முக்கிய வீரர்! இனி அதிரடி தான்!

ஐபிஎல் 2025 தொடர் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சாம்பியன்ஸ் டிராபி தொடர் முடிந்ததும் போட்டி தொடங்குகிறது.

Written by - RK Spark | Last Updated : Feb 11, 2025, 06:51 AM IST
  • அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல் தொடர்.
  • அட்டவணை விரைவில் வெளியாக உள்ளது.
  • முதல் போட்டி கொல்கத்தாவில் நடைபெறும்.
சிஎஸ்கே ரசிகர்கள் குஷியோ குஷி! பார்மிற்கு வந்த முக்கிய வீரர்! இனி அதிரடி தான்! title=

லாகூர் கடாபி மைதானத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பாகிஸ்தான், நியூசிலாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்கா இடையேயான முத்தரப்புத் தொடரின் இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் கேன் வில்லியம்சனின் சதம் மற்றும் டெவோன் கான்வேயின் அபாரமான பேட்டிங்கினால் நியூஸிலாந்து அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. டெவோன் கான்வே மூலம் 107 பந்துகளில் 97 ரன்கள் எடுத்து 3 ரன்னில் சதத்தை மிஸ் செய்துள்ளார். சவுத் ஆப்பிரிக்கா அடித்த 305 ரன்கள் என்ற பெரிய இலக்கைத் துரத்திய நியூஸிலாந்து அணி இவர்கள் இருவரின் பாட்னர்ஷிப்பால் எளிதாக வெற்றி பெற்றது.

மேலும் படிக்க | சிஎஸ்கே பிளேயிங் 11ல் இவருக்கு நிச்சயம் இடம் இருக்கும்! யார் இந்த இளம் வீரர்?

இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் டெவன் கான்வே அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின் போது ரச்சின் ரவீந்திராவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக இந்த போட்டியில் கான்வே இடம் பெற்றார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்தி கொண்டு 97 ரன்கள் அடித்துள்ளார். வில்லியம்சன் மற்றும் கான்வே ஜோடி சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்தனர். ஒருநாள் கிரிக்கெட்டில் தனது ஆறாவது சதத்தை எட்ட மூன்று ரன்கள் மட்டுமே இருந்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபுறம் வில்லியம்சன் 113 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 133 ரன்கள் எடுத்தார்.

டெவோன் கான்வே அசத்தல்

சவுத் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து வீரர் டெவோன் கான்வே ஒருநாள் கிரிக்கெட்டில் தனது நான்காவது அரைசதத்தை அடித்துள்ளார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வடிவங்களிலும் நியூசிலாந்தின் நட்சத்திர தொடக்க வீரராக உள்ள கான்வே, ஒருநாள் போட்டிகளில் நம்பமுடியாத சராசரி வைத்துள்ளார். கான்வேயின் சராசரி 46க்கு மேல் உள்ளது. அவர் இதுவரை அடித்துள்ள 9 ஐம்பது பிளஸ் ஸ்கோரில் 5-ஐ சதங்களாக மாற்றியுள்ளார். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் 33 ஒருநாள் போட்டிகளில் கான்வே 1,300 ரன்களை கடந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் கொண்டாட்டம்

கான்வேயின் இந்த சிறப்பான பார்ம் சென்னை அணியின் ரசிகர்கள் உற்சாகப்படுத்தி உள்ளது. ஏனெனில் அடுத்த மாதம் ஐபிஎல் 2025 போட்டிகள் நடைபெற உள்ளது. ஐபிஎல் 2023 தொடரில் சென்னை அணி கோப்பையை வெல்ல டெவோன் கான்வே முக்கிய காரணமாக இருந்தார். ஓப்பனிங் வீரராக அந்த தொடர் முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் காயம் காரணமாக அவர் ஐபிஎல் 2024 தொடரில் இடம் பெறவில்லை. இதனால் சரியான ஓப்பனிங் ஜோடி கிடைக்காமல் சிஎஸ்கே தடுமாறியது. இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மீண்டும் டெவோன் கான்வேவை சென்னை அணி எடுத்துள்ளது. தற்போது நல்ல பார்மில் இருக்கும் கான்வே ஐபிஎல் தொடரிலும் இதனை தொடர்வார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் படிக்க | ரச்சின் ரவீந்திரா காயம்! மைதானத்தில் போதிய வெளிச்சம் இல்லை? சாம்பியன்ஸ் டிராபியில் சிக்கல்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News