சேட்டனுக்கு ஏற்பட்ட சோகம்! சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்!

Sanju Samson: இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியின் போது சஞ்சு சாம்சனுக்கு விரலில் காயம் ஏற்பட்டது. இதனால் அடுத்த சில மாதங்கள் அவர் ஓய்வில் இருப்பார்.

Written by - RK Spark | Last Updated : Feb 3, 2025, 07:00 PM IST
  • சஞ்சு சாம்சன் காயம்.
  • 5வது டி20யின் போது காயம் ஏற்பட்டது.
  • சில மாதங்கள் ஓய்வில் இருப்பார்.
சேட்டனுக்கு ஏற்பட்ட சோகம்! சஞ்சு சாம்சன் ஐபிஎல்லில் விளையாடுவது சந்தேகம்! title=

இந்திய அணியில் சஞ்சு சாம்சன் சமீப நாட்களாக சிறப்பாக விளையாடி வந்தார். பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா டி20 தொடர்களில் ஓப்பனராக களமிறங்கி நல்ல ரன்கள் அடித்திருந்தார். இதனால் இங்கிலாந்து தொடரில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளிலும் ஒரே மாதிரி அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஐந்து டி20 போட்டிகளில் சேர்த்து மொத்தமாக 35 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார் சஞ்சு சாம்சன். இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று இருந்தாலும் சஞ்சு சாம்சன் பார்ம் ஏமாற்றம் அளித்துள்ளது.

மேலும் படிங்க: பும்ரா சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடுவாரா? அஜித் அகர்கர் சொல்வது என்ன?

சஞ்சு சாம்சன் காயம்

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆரம்பித்தார். ஆனால் இரண்டாவது ஓவரில் மார்க் வுட் பந்தில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்பட்டாலும் பீல்டிங்கில் சஞ்சு சாம்சன் வரவில்லை. அவருக்கு பதிலாக துருவ் ஜூரேல் விக்கெட் கீப்பிங் செய்தார். இந்நிலையில் சஞ்சு சாம்சன் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்ல உள்ளார் என்றும், ஐந்து முதல் ஆறு வாரங்கள் வரை அங்கு அவருக்கு மருத்துவ உதவிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. "சஞ்சு சாம்சனுக்கு வலது ஆல்காட்டி விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் சிறிது நாட்களுக்கு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வில் இருப்பார். ஐந்து முதல் ஆறு வாரங்களுக்கு பிறகு அவருடைய காயம் குறித்து தெளிவான தகவல் தெரியும்"  என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ரஞ்சி போட்டியில் சஞ்சு சாம்சன் விளையாட முடியாது

டி20 தொடர் முடிந்த பிறகு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பெறவில்லை. இதனால் அவர் கேரளா அணிக்காக ரஞ்சிக்கோப்பையில் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ரஞ்சிக்கோப்பை கால் இறுதியில் பங்கேற்க மாட்டார் என்று கூறப்படுகிறது. இந்த தொடர் வரும் பிப்ரவரி 8 தேதி முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஐபிஎல் விளையாடுவாரா சஞ்சு சாம்சன்?

ஐபிஎல் போட்டிகள் மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில் சஞ்சு சாம்சன் அதற்குள் குணமாகி விடுவார் என்று கூறப்படுகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் சஞ்சு சாம்சன் அணியின் முக்கிய வீரராக உள்ளார். ஒருவேளை அவரது காயம் குணமாகவில்லை என்றால் அது ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும். மார்ச் 24ஆம் தேதி ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ளதாக கூறப்பட்டு வருகிறது. இருப்பினும் அதற்குள் சஞ்சு சாம்சனின் காயம் குணமடையும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மேலும் படிங்க: JOHN CENA | கடைசி ராயல் ரம்பல் மேட்சில் ஜான் சீனா அதிர்ச்சி தோல்வி... WWE ரசிகர்கள் ஷாக்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News