டோக்கியோ ஒலிம்பிக்ஸில் இதுவரை இல்லாத பல புது அறிவிப்புகள் வெளியாகின்றன. தற்போதைய கோவிட் சூழலில் ஒலிம்பிக்ஸ் ஏற்கனவே தள்ளிப் போடப்பட்டு, தற்போது நடைபெறவிருக்கும் சூழ்நிலையில், COVID காரணமாக ஹாக்கி இறுதிப் போட்டி நடைபெறாவிட்டால், இரு அணிகளுக்கும் தங்கம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது கோவிட் தொற்றுநோயின் காரணமாக வெற்றியாளரை தீர்மானிக்கும் இறுதிச்சுற்று போட்டிகள் நடைபெறாத பட்சத்தில், அந்தப் போட்டி, கோல் எதுவும் போடாத போட்டியாக கருதப்பட்டு இரு இறுதி வீரர்களுக்கும் தங்க பதக்கம் கொடுக்கப்படும்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் இறுதிப் போட்டியாளர்கள் கோவிட் -19 பாதிப்பினால் விளையாட முடியாமல் போனால் இரு அணிகளும் வெற்றியாளராக கருதப்படுவார்கள் என சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (International Hockey Federation) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
ஒரு அணி, கோவிட் வழக்குகள் காரணமாக டோக்கியோ ஹாக்கி போட்டிகளில் இருந்து விலகுவதற்கான விருப்பம், அந்தந்த நாடுகளிடமே உள்ளது என்று FIH தலைமை நிர்வாக அதிகாரி தியரி வெயில் (Thierry Weil) கூறினார்.
Also Read | டி 20 உலகக் கோப்பை 2021 குரூப் அறிவிப்பு: ஒரே பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான்
டோக்கியோ விளையாட்டுகளுக்காக சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பால் வடிவமைக்கப்பட்ட விளையாட்டு ஒழுங்குமுறைகள் (Sports Specific Regulations) அமல்படுத்தப்படும். அதன்படி, இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரு அணியால் போட்டியில் விளையாட முடியாவிட்டால், அது மற்ற அணிக்கு 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கிடைத்ததாக கருதப்படும்.
இரு அணிகளும் விளையாட முடியாவிட்டால், அது கோல் போடப்படாத போட்டியாக கருதப்பட்டு டிராவான போட்டியாக கருதப்படும். இருப்பினும், முடிந்தால் அணிகள் மீதமுள்ள பூல் போட்டிகளில் விளையாடும்.
"இறுதி போட்டிக்குத் தகுதி பெறும் இரு அணிகளும் கோவிடால் பின்வாங்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தால், இரு அணிகளுக்கும் தங்கப் பதக்கங்கள் கிடைக்கும். இது ஏற்கனவே எங்கள் விளையாட்டு குறிப்பிட்ட ஒழுங்குமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது” என்று வெயில் கூறினார்.
டோக்கியோ ஒலிம்பிக் “சாதாரண விளையாட்டுகளிலிருந்து வேறுபட்டது”என்று FIH தலைமை நிர்வாக அதிகாரி கூறினார். ஒரு அணியில் பலருக்கு கோவிட் தொற்று இருந்தாலும் கூட ஒரு அணி தொடர்ந்து விளையாட முடியும்.
Also Read | Tokyo Olympics போட்டிகளில் இருந்து விலகிய டென்னிஸ் நட்சத்திரங்கள்...
விதிமுறைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைச் சுற்றியுள்ள பல "ifs and buts" தொடர்பாக இன்னும் தெளிவுபடுத்தல்கள் தேவை என்றும் அவர் கூறினார், ஆனால் COVID காரணமாக ஒரு அணி போட்டியில் இருந்து விலக வேண்டிய சூழ்நிலை எழாது என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
“இந்த ஒலிம்பிக்ஸ் விளையாட்டு, பிற சாதாரண விளையாட்டுகளிலிருந்து வேறுபட்டுள்ளது. இந்த ஒலிம்பிக், வரலாற்றில் என்றென்றும் இடம்பெறும். இது முந்தைய விளையாட்டுகளைப் போல் இருக்காது” என்று அவர் தெரிவித்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ஜூலை 23 ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்ட அவர், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுடன் தொடர்புடைய அனைவரின் ஆரோக்கியமும் ஆபத்தில் உள்ளது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும் என்றும் தியரி வெயில் சொன்னார்.
COVID பாஸிடிவ் ஏற்பட்டால் ஹாக்கி போட்டியில் இருந்து விலகுவதற்கான விதிகள் குறித்து கேட்கப்பட்டபோது, FIH தலைமை நிர்வாக அதிகாரி இவ்வாறு தெரிவித்தார். “இதுவரை எதுவும் முடிவு செய்யப்படவில்லை. எப்போது போட்டியில் இருந்து விலகலாம் என்பது சம்பந்தப்பட்ட அணிகளின் விருப்பம்.
ஒரு அணியில் 6, 7 பேருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் அவர்கள் போட்டியில் விளையாட முடியும். ஒரு அணியில் அனைவரும் பாதிக்கப்படும் வரை, ஹாக்கி ஒலிம்பிக்ஸ் போட்டியில் இருந்து அணிகள் விலகாது என்று நினைக்கிறேன்" FIH தலைமை நிர்வாக அதிகாரி தியரி வெயில் (Thierry Weil) கூறினார்.
Also Read | கோவாவில் காதலியோடு லியாண்டர் பயஸ் ஜாலி? வைரலாகும் புகைப்படங்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR