India vs Australia 3rd Test: அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி இந்திய அணிக்கு நிறைய சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பிரிஸ்பேனில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது என்று அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர். இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக முகமது ஷமி இந்திய அணியில் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் இதுவரை இல்லை. மேலும் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் அதிகளவில் உள்ளது.
மேலும் படிக்க | Jasprit Bumrah: பும்ராவின் முதல் சர்வதேச விக்கெட் யாருடையது தெரியுமா?
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்துள்ளது. இதனால் தற்போது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 2வது டெஸ்டில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக பேட்டிங் பார்க்கப்படுகிறது. கேஎல் ராகுல், விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற சீனியர் வீரர்கள் களத்தில் நீண்ட நேரம் நிற்கவில்லை. இது அணிக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. முதல் டெஸ்டில் இருந்தது போல 2வது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சும் அவ்வளவு சிறப்பாக இல்லை. இதனால் 3வது டெஸ்ட் போட்டியில் சில அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட்டிற்கான இந்திய அணி?
காயத்தில் இருந்து மீண்டுள்ள முகமது ஷமி இந்திய அணியில் விரைவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது SMAT தொடரில் விளையாடி வரும் முகமது ஷமி சிறப்பாக பந்து வீசி வருகிறார். இந்திய அணியின் மருத்துவ குழு ஷமி பிட்டாக இருக்கிறார் என்று சொன்னவுடன், ஆஸ்திரேலியா புறப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் 3வது டெஸ்டிற்கு முன்பு அணியில் இணைவாரா என்பது சந்தேகம் தான். ஷமி வந்துவிட்டால் ஹர்ஷித் ராணாவுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்படலாம். 2வது டெஸ்டில் அஷ்வின் விளையாடினாலும் பலனளிக்கவில்லை. எனவே மீண்டும் வாஷிங்டன் சுந்தர் அணிக்கு திரும்பலாம். சுந்தர் இணைந்தால் பேட்டிங்கில் கூடுதல் பலம் கிடைக்கும்.
ஓய்வை அறிவிக்கும் ரோஹித் சர்மா?
முதல் டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களால் ரோஹித் சர்மா விளையாடவில்லை. அவருக்கு பதில் பும்ரா கேப்டனாக செயல்பட்டார். ஆனால் 2வது டெஸ்டில் ரோஹித் சர்மா விளையாடியும் பயனளிக்கவில்லை. கேப்டனாகவும், பேட்டராகவும் தோல்வியை சந்தித்து உள்ளார். இதனால் ரோஹித் சர்மா நீக்கப்பட வேண்டும் என்ற குரல் தற்போது எழுந்துள்ளது. தன்னுடைய பார்மை கருத்தில் கொண்டு ரோஹித் சர்மா உடனே விலகுவாரா என்று கேள்விக்கும் எழுகிறது. இந்த தொடர் முடிந்ததும் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. வரும் டிசம்பர் 14ம் தேதி 3வது டெஸ்ட் தொடங்க உள்ள நிலையில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேலும் படிக்க | ஆஸ்திரேலியாவின் ஸ்காட் போலண்ட் ஐபிஎல் 2025ல் விளையாடுகிறாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ