IND vs AUS Second ODI: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி, கடந்த போட்டியை போலவே இம்முறையும் பேட்டிங்கில் சொதப்பியது. அதற்கு முழு முதற்காரணம், மிட்செல் ஸ்டார்க். இடதுகை பந்துவீச்சாளர்களில் இந்திய பேட்டர்களுக்கு இருக்கும் பெரும் பிரச்னை இன்றும் தொடர்ந்தது.
ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில், சுப்மான் கில் பேக்வர்ட் பாய்ண்ட் திசையில் லபுசேனிடம் கேட்ச் கொடுத்து, டக் அவுட்டானார். இதையடுத்து, ஸ்டார்க் வீசிய ஐந்தாவது ஓவரில் ரோஹித் சர்மா 13 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் ரன் ஏதும் இன்றியும் அடுத்தடுத்த பந்துகளில் வெளியேறினர்.
Australia win the second #INDvAUS ODI. #TeamIndia will look to bounce back in the series decider
Scorecardhttps://t.co/dzoJxTO9tc @mastercardindia pic.twitter.com/XnYYXtefNr
— BCCI (@BCCI) March 19, 2023
விராட் கோலி போராட்டம்
விராட் கோலி ஒருமுனையில் பொறுமை காட்டி வந்தார். இருப்பினும், கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 9 ரன்களில் ஸ்டார்கிடமும், ஹர்திக் பாண்டியா 1 ரன்னில் அபாட்டிடமும் ஆட்டமிழந்தனர். 35 பந்துகள் தாக்குபிடித்த விராட் கோலி 31 ரன்களில் அபாட் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார்.
ஜடேஜா, அக்சர் படேல் சொற்ப ரன்களை எடுக்க அனைவரும் ஒற்றை இலக்கத்தில் அவுட்டாகினர். இதனால், 26 ஓவர்களில் 117 ரன்களுக்கு இந்தியா ஆல்-அவுட்டானது. அக்சர் படேல் 29 ரன்களில் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா தரப்பில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், அபாட் 3 விக்கெட்டுகளையும், நாதன் எல்லீஸ் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பந்துவீச்சை பந்தாடிய ஆஸி.,
இந்திய அணி பேட்டிங்கில் திணறியதால், ஆஸ்திரேலியாவுக்கும் பேட்டிங் கடினமாக இருக்குமோ என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நிலைமை தலைகீழானது. தொடக்க வீர்ரகளாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ் இந்திய பந்துவீச்சை நிர்மூலமாக்கினர்.
That was fun to watch! #INDvAUS
Scorecard: https://t.co/LXGrkQy5JJ pic.twitter.com/kSlD6IvP7G
— cricket.com.au (@cricketcomau) March 19, 2023
மார்ஷின் இமாலய சிக்ஸர்கள்
குறிப்பாக, மிட்செல் மார்ஷ் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் மைதானத்தின் மூலைமுடுக்கெல்லாம் பறக்கவிட்டார் எனலாம். இவர்களின் அதிரடியால் 11 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா இலக்கை அடைந்தது. இதன்மூலம், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை, 1-1 என்ற கணக்கில் சமன்நிலைப்படுத்தியது. மார்ஷ் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் என 36 பந்துகளில் 66 ரன்களை எடுத்தார். டிராவிஸ் ஹெட், 10 பவுண்டரிகள் உள்பட 30 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார்.
டிசைடர் சென்னையில்!
234 பந்துகள் மிச்சமிருக்க இந்திய அணி மிக மோசமான தோல்வியை பதிவுசெய்துள்ளது. இதுவே, அதிக பந்துகள் வித்தியாசத்தில் இந்தியா பெற்ற தோல்வி என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடரின் கடைசி போட்டி தற்போது டிசைடராக மாறியுள்ளது. இப்போட்டி, வரும் புதன்கிழமை (மார்ச் 22) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க | ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் சொன்ன அதிரடி மாற்றங்கள்! ஐசிசி முடிவு என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ