IND vs ENG: இந்தியாவின் 15 பேர் கொண்ட ஸ்குவாட்... பிரதான பிளேயிங் XI இதுதான்!

IND vs ENG: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இந்திய அணியின் பிரதான பிளேயிங் லெவன் குறித்து இங்கு காணலாம். 

Written by - Sudharsan G | Last Updated : Jan 7, 2025, 08:24 PM IST
  • பும்ரா இத்தொடரில் விளையாட மாட்டார்.
  • இன்றோ நாளையோ அதிகாரப்பூர்வ ஸ்குவாட் அறிவிக்கப்படலாம்.
  • பேக்-அப் வீரர்களிலும் இந்திய அணி கவனம் செலுத்தும்.
IND vs ENG: இந்தியாவின் 15 பேர் கொண்ட ஸ்குவாட்... பிரதான பிளேயிங் XI இதுதான்! title=

India National Cricket Team, IND vs ENG: 5 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இங்கிலாந்து அணி இந்த ஜனவரி, பிப்ரவரியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. வரும் ஜன. 22ஆம் தேதி தொடங்கும் இந்த தொடரில் பிப்.12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்.19ஆம் தேதி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்குவதால் இந்த தொடர் இரு அணிகளுக்கும் பயிற்சியாக அமையும்.

இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர்தான் ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கு கடைசி ஐசிசி தொடராக அமைய வாய்ப்புள்ளது. அப்படியிருக்க, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான ஸ்குவாட் மற்றும் சாம்பியன்ஸ் டிராபிக்கான ஸ்குவாட் மீதான எதிர்பார்ப்பு மக்களிடத்தில் அதிகமாகி உள்ளது. அந்த வகையில், இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியின் டி20 மற்றும் ஒருநாள் ஸ்குவாட் இன்றோ, நாளையோ அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

IND vs ENG: பும்ரா வர மாட்டார்

முதலில் டி20 அணியே அறிவிக்கப்படும். இருப்பினும் ஒருநாள் அணிதான் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. காயத்தில் சிக்கியிருக்கும் பும்ரா இங்கிலாந்து தொடரில் விளையாட மாட்டார் என்பது 90% உறுதியாகி இருக்கிறது எனலாம். வேண்டுமென்றால் கடைசி ஒருநாள் போட்டியில் மட்டும் ஒரு பயிற்சிக்காக பும்ரா விளையாடலாம் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க |  இனி எங்கும் சுப்மான் கில்லுக்கு இடமே கிடையாது... துணை கேப்டனாகும் இந்த வீரர்!

IND vs ENG: ரோஹித் சர்மா கிடையாதா?

இங்கிலாந்து தொடரில் ரோஹித் சர்மா விளையாடுவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் தகவல்கள் வெளியாகின்றன. அவருக்கு பதில் ஹர்திக் பாண்டியா ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் இதற்கான மிக மிக குறைவுதான். கம்பீர் தலைமை பயிற்சியாளராக வந்த பின்னர் இந்திய அணி தொடர் சறுக்கலை சந்தித்து வரும் சூழலில், இங்கிலாந்து தொடரை ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெறுவது பெரும் ஊக்கமாக இருக்கும்.

IND vs ENG: பேக்-அப் வீரர்கள் யார்?

ஜெய்ஸ்வால் இங்கிலாந்து தொடரின் மூலம் ஒருநாள் அரங்கில் அறிமுகமாவார் எனலாம். ஹர்திக் பாண்டியா இருப்பதால், நிதிஷ் குமார் ரெட்டியும் பேக்அப்பாக ஸ்குவாடுக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிஷப் பண்ட், கேஎல் ராகுல் ஆகிய இரு விக்கெட் கீப்பர் பேட்டராக இருந்தாலும் சஞ்சு சாம்சனின் டி20 பார்மை கருத்தில்கொண்டு அவருக்கு ஒருநாள் அணிக்குள்ளும் வாய்ப்பளிக்கலாம் என்கிறார்கள். சுப்மான் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரியான் பராக் ஆகியோரில் யார் யார் ஸ்குவாடில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதையும் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

IND vs ENG: வருகிறார் ஷமி

அக்சர் பட்டேல் ஜடேஜாவுக்கு உள்ளே வருவாரா; குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதும் கேள்விகுறியாக உள்ளது. பும்ரா இல்லாத சூழலில், சீனியர் வீரரான ஷமி அணிக்குள் வருவார் என தெரிகிறது. இங்கிலாந்து தொடரில் மட்டுமின்றி சாம்பியன்ஸ் டிராபியிலும் ஷமி முக்கிய வீரராக பார்க்கப்படுகிறது. ஷமி, சிராஜ், அர்ஷ்தீப் சிங் ஆகியோர்தான் பிரதான பந்துவீச்சாளர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

இந்திய அணியின் 15 பேர் கொண்ட ஸ்குவாட்

பிரதான பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ரிஷப் பண்ட், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது ஷமி, முகமது சிராஜ்.

பேக்அப் வீரர்கள்: சுப்மான் கில், நிதிஷ் குமார் ரெட்டி / சஞ்சு சாம்சன், அக்சர் பட்டேல், ஹர்ஷித் ராணா

மேலும் படிக்க | BGT தொடரில் தோல்வி! சாம்பியன்ஸ் டிராபியில் பிசிசிஐ அதிரடி மாற்றம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News