IND vs NZ Highlights: 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் இந்திய அணிக்கு பிருத்வி ஷா திரும்ப அழைக்கப்பட்டார். சையத் முஷ்டாக் அலி டிராபி 2022ல் அவர் 363 ரன்கள் எடுத்து இந்திய அணியில் மீண்டும் இடம் பெற்றார். அதிக ரன்கள் குவித்த போதிலும், ராஞ்சியில் நடந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் ஷா விளையாடும் XIல் எடுக்கப்படவில்லை. இதனால் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது ரசிகர்கள் ட்விட்டரில் முற்றிலும் கோபமடைந்தனர். டாஸ் வென்று முதலில் பீல்டிங் தேர்வு செய்தது இந்திய அணி. நியூஸிலாந்து அணிக்கு சான்ட்னர் கேப்டனாக செயல்பட்டார். ஷுப்மான் கில் இஷான் கிஷனுடன் இணைந்து தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார்கள் என்று ஹர்திக் தெரிவித்தார். "இது ஒரு இளம் அணி, அனைவரும் செல்ல தயாராக உள்ளனர்" என்று ஹர்திக் கூறினார்.
Captain @hardikpandya7 wins the toss and elects to bowl first in the 1st T20 against New Zealand.
A look at our Playing XI for the game
Live - https://t.co/9Nlw3mU634 #INDvNZ @mastercardindia pic.twitter.com/fNd9v9FTZz
— BCCI (@BCCI) January 27, 2023
மேலும் படிக்க | IND vs NZ: பார்மில் கில்... பாவம் பிருத்வி ஷா - ஹர்திக் பாண்டியா கூறுவது என்ன?
போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஷாவைத் தொடரின் தொடக்க ஆட்டக்காரராக இந்தியா தேர்வு செய்யாததன் காரணத்தை ஹர்திக் வெளிப்படுத்தியிருந்தாலும், ரசிகர்கள் தேர்வு அழைப்புக்காக அணி நிர்வாகத்திடம் கோபமடைந்தனர். "ஷுப்மான் கில் நன்றாகச் விளையாடி உள்ளார், அதனால் அவருக்கு முதலில் வாய்ப்பு கிடைக்கும். உண்மையில், வேறு எந்த காரணமும் இல்லை. அவர் பேட்டிங் செய்யும் விதம், அணிக்கு பக்கபலமாக இருக்கும்," என்று ஹர்திக் ஷா அணியில் இடம் பெறுவாரா என்ற கேள்விக்கு பதிலளித்தார்.
Prithvi shaw 's career will be ruined by team management #PrithviShaw
— Gagandeep Sihag (@GagandeepSihag2) January 27, 2023
Prithvi Shaw left out of playing XI. Black day for Indian cricket. Shame on you @hardikpandya7
— microaggression (@shekhariyat) January 27, 2023
Pandya played with hooda for baroda
Pandya played with ishan kishan for MI
Pandya played with shubman gill for GTHardik Pandya giving chances to his friends under his captaincy#INDvsNZ #PrithviShaw #INDvNZ
— inder Singh bhati (AD) (@InderSinghBha18) January 27, 2023
நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா 3-0 என்று கைப்பற்றியது. இந்நிலையில் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து 176 ரன்களை குவித்தது. இந்திய அணி 20 ஓவர் முடிவில் 155 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான போட்டியில் ருத்ராஜ்க்கு பதில் கில்லுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதில் அவர் சரியாக விளையாட போதிலும் தொடர்ந்து வாய்ப்பு கிடைத்தது. அதே போல் தற்போது டி20-ல் சிறந்த வீரரான ஷாவிற்கு பதிலாக மீண்டும் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது நண்பர்களுக்கு மட்டும் பாண்டியா வாய்ப்பு வழங்குகிறார் என்ற குற்றசாட்டு தற்போது எழுந்துள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ