புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கொரோனா (Covid-19) தடுப்பூசியின் முதல் டோஸை திங்கள்கிழமை எடுத்துக் கொண்டார். இந்தியன் பிரீமியர் லீக் 2021 இல் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக இருந்தார். ஐபிஎல் போட்டியில் பல வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் லீக்க பாதியில் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kohli), இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். கொரோனா தடுப்பூசி (Corona Vaccine) போட்டுக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள விராட் கோலி, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ALSO READ | Irfan Pathan: IPL போட்டிகள் ஒத்திப்போடப்பட்டதால் RCB ரசிகர்களுக்கு ஏமாற்றம்
முன்னதாக இந்தியாவில் நடத்தப்பட்ட ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வீடு திரும்பினார். வீடு திரும்பிய விராட் கோலி கொரோனா வைரஸ் எதிரான பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். அத்துடன் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் இணைந்து விராட் கோலி கொரோனா நிவாரண நிதி திரட்டினார். வைரசுக்கு எதிராக போராடும் இந்தியாவிற்காக ரூபாய் 2 கோடி தனது மனைவி அனுஷ்கா சர்மா உடன் சேர்ந்து நன்கொடை அளித்தார் விராட் கோலி.
மேலும் வைரசுக்கு எதிராக போராடும் நாட்டு மக்களுக்காக தனது பங்களிப்போடு சேர்த்து மக்களையும் அதற்கு ஆதரவு அளிக்கும்படி கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கேட்டுக்கொண்டனர். இவர்கள் கேட்டுக்கொண்ட 24 மணிநேரத்தில் 3.6 கோடி நன்கொடையாகக் கிடைத்தது. இதற்காகவும் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR