சவுத்தாம்ப்டனில் India Vs New Zealand ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி

உலக கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டி, சவுத்தாம்ப்டனின் ஏகாஸ் பவுல் மைதானத்தை இறுதி செய்துள்ளது. ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை நடைபெறும் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெறும்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 10, 2021, 05:37 PM IST
  • இங்கிலாந்து அரசின் படிப்படியாக விதிகள் தளர்த்தப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களை விளையாட்டைப் பார்க்க அனுமதிக்க முடியும் என ஐசிசி கூறியுள்ளது.
  • சமீபத்தில் முடிவடைந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா
சவுத்தாம்ப்டனில் India Vs New Zealand ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி  title=

உலக கிரிக்கெட் கவுன்சில் (ICC) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் (WTC) இறுதிப் போட்டி, சவுத்தாம்ப்டனின் ஏகாஸ் பவுல் மைதானத்தை இறுதி செய்துள்ளது. ஜூன் 18 முதல் ஜூன் 22 வரை நடைபெறும் இறுதிப் போட்டி இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையில் நடைபெறும்.

போட்டி லார்ட்ஸில் நடக்காது என்று BCCI தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்த இரண்டு நாட்களுக்குப் பிறகு இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் (ECB) இணைந்து சவுத்தாம்ப்டனை  இறுதி செய்துள்ளது, COVID-19 தொற்று நெருக்கடியில் போட்டியை பாதுகாப்பாக நடத்த முடியும். 
இங்கிலாந்து அரசின் படிப்படியாக விதிகள் தளர்த்தப்படும் நடவடிக்கை திட்டமிட்டபடி நடந்தால், குறைந்த எண்ணிக்கையிலான ரசிகர்களை விளையாட்டைப் பார்க்க அனுமதிக்க முடியும் என ஐசிசி கூறியுள்ளது.

COVID-19 தொற்று நெருக்கடி காரணமாக தென்னாப்பிரிக்காவுக்கான ஆஸ்திரேலியாவின் சுற்றுப்பயணம் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டிக்கு,  தகுதி பெற்ற முதல் அணி நியூசிலாந்து ஆகும். சமீபத்தில் முடிவடைந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்தை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, தற்போதைய WTC சுழற்சியை 72.2 சதவீத புள்ளிகளுடன் (720 புள்ளிகளில் 520 புள்ளிகள்) முதலிடத்தில் பிடித்த பிறகு இந்திய அணி தகுதி பெற்றது.

ALSO READ | IPL 2021: அஸ்வின், அக்சர், ரிஷப் பற்றி Ponting போட்ட ட்வீட்டும் அதற்கு பந்த் அளித்த பதிலும்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News