IND vs NZ: நியூசிலாந்தை பொட்டலம் போட்ட இந்திய பவுலர்கள்... இலக்கு இவ்வளவுதானா?

IND vs NZ 2nd ODI: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 35 ஓவர்களில் 106 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது.   

Written by - Sudharsan G | Last Updated : Jan 21, 2023, 04:42 PM IST
  • ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
  • வாஷிங்டன் சுந்தர், பாண்டியா ஆகியோர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
  • கிளேன் பிளிப்ஸ் அதிகபட்சமாக 36 ரன்களை எடுத்தார்.
IND vs NZ: நியூசிலாந்தை பொட்டலம் போட்ட இந்திய பவுலர்கள்... இலக்கு இவ்வளவுதானா? title=

IND vs NZ 2nd ODI: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் உள்ள சாஹீத் வீர் நாரயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இந்தியா தரப்பில் கடந்த போட்டியில் இருந்த அதே அணிதான் களமிறக்கப்பட்டது. கடந்த போட்டியில் மோசமாக பந்துவீச்சியிருந்ததால், இந்த போட்டியில் பந்துவீச்சு தரப்பில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஃபின் ஆலன், டேவான் கான்வே ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு ஓப்பனர்களாக களமிறங்கினர். 

மேலும் படிக்க | மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் ஆன ரிஷப் பன்ட்டுக்கு காத்திருக்கும் சோதனை

முதல் ஓவரிலேயே தாக்குதல்

முதல் ஓவரிலேயே இந்திய அணி தனது தாக்குதலை தொடங்கியது எனலாம். முதல் ஓவரின் 5ஆம் பந்தில் ஆலன், ஷமி பந்துவீச்சில் கிளீன் போலாடானார். தொடர்ந்து, கான்வே, நிக்கோலஸ், மிட்செல், டாம் லாத்தம் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழ்ந்தனர். பிளிப்ஸ், பிரேஸ்வெல் ஆகியோர் மட்டும் சற்று நிலைத்து நின்று விளையாடினர். 

பிரேஸ்வெல் 22 ரன்களில் நடையைக்கட்ட, அடுத்த வந்த சான்ட்னர் பிளிப்ஸ் உடன் சேர்ந்து சற்றுநேரம் தாக்குபிடித்தார். அவர் 27 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து பிளிப்ஸும் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால், தொடர்ந்து, டெயிலெண்டர்களும் ஒற்றை இலக்கத்தில் விக்கெட்டை இழக்க, நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களில் 108 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. 

109 ரன்கள்தான் இலக்கு

இந்திய அணி பந்துவீச்சு தரப்பில் ஷமி 3 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஷர்துல், குல்தீப் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். இதன்மூலம், 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்க உள்ளது. இதில், இந்தியா பெரிய ஓவர்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால், சூப்பர் லீக் தொடருக்கு உபயோகமாக இருக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

மேலும் படிக்க | சமயம் பார்த்து ரோஹித் சர்மாவை கலாய்த்த இஷான் கிஷன்! வைரலாகும் வீடியோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News