MS டோனியை புறக்கணிக்கிறதா BCCI... வருத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்...

இந்திய கிரிக்கெட் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு போஸ்டர் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.

Last Updated : Mar 24, 2020, 04:15 PM IST
MS டோனியை புறக்கணிக்கிறதா BCCI... வருத்தத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்... title=

இந்திய கிரிக்கெட் அணி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 13 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளது. இந்த தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஒரு போஸ்டர் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளது.

"13 மில்லியன் பின்தொடர்பாளர்களுடன் வலுவான குடும்பம். உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி," என்று BCCI தனது இன்ஸ்டாகிராம் கைப்பிடியில் குறிப்பிட்டுள்ளது. எனினும் இந்த பதிவு டோனியின் ரசிகர்களை மகிழ்விக்கவில்லை, மாறகாக கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்றுள்ளது.

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 

A 13 Million strong family  hank you for your love and suppo 

A post shared by Team India (@indiancricketteam) on

காரணம் இந்த சாதனையை கொண்டாட ஆண்கள் மற்றும் பெண்கள் அணியைச் சேர்ந்த ஒன்பது முன்னணி கிரிக்கெட் வீரர்களைக் காட்டும் ஒரு போஸ்டரினை வாரியம் வெளியிட்டுள்ளது. எனினும் இந்த புகைபடம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனியின் புகைப்படம் இன்றி வடிவமைக்கப்பட்டுள்ளது. BCCI-ன் இந்த செயல்பாடு தற்போது டோனியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

BCCI-ன் இந்த போஸ்டரில் சேர்க்கப்பட்ட வீரர்களின் படங்கள் யாதெனினில், கேப்டன் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆவர். அதேவேளையில் பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனைகள் ஹர்மன்பிரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா மற்றும் போனம் யாதவ் ஆகியோரும் இந்த புகைப்படத்தில் இடம்பெற்றெள்ளனர். ஆண்கள் அணியை போல் பெண்கள் அணியிலும் முன்னாள் அணி தலைவரி மித்தாலி ராஜின் புகைப்படம் கைவிடப்பட்டுள்ளது. 

BCCI-ன் இந்த செயல்பாடு, கடந்த ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைப்பெற்ற ICC உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்குப் பின்னர் விளையாடாத முன்னாள் இந்திய கேப்டனின் எதிர்காலம் குறித்த கவலையைத் தூண்டியுள்ளது. முன்னதாக BCCI அதன் மைய ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் இருந்து டோனியை விலக்கியது குறிப்பிடத்தக்கது.

2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான காலப்பகுதிக்கான மத்திய ஒப்பந்தங்களை அறிவித்த BCCI, தங்களது பட்டியலில் டோனியை ரூ.5 கோடி ஊதியம் பெறும் A பிரிவில் வைத்திருந்தது. இந்நிலையில் BCCI-ன் சமீபத்திய ஆண்டு வீரர் ஒப்பந்தங்களில் நவ்தீப் சைனி, மாயங்க் அகர்வால், ஸ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் தீபக் சாஹர் ஆகிய நான்கு புதிய வீரர்கள் சேர்க்கப்பட்டனர்.

கேப்டன் விராட் கோலி, அவரது துணை ரோஹித் சர்மா மற்றும் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் அதிகபட்ச A+ அடைப்புக்குறிக்குள் (7 கோடி ரூபாய் பெரும் வீரர்கள்) வைத்திருக்கிறது. ஆனால் டோனியின் பெயர் A பிரிவிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News