வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா காயமடைந்தார். 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் அவர் காயமடைந்து மைதானத்தை விட்டு வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருடைய காயத்தின் நிலை என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
மேலும் படிக்க | ’என்னோட இலக்கு இதுதான்’ அஸ்வினுடன் மனம்திறந்து பேசிய தினேஷ் கார்த்திக்
5 பந்துகளில் 11 ரன்கள் எடுத்திருந்தபோது மைதானத்தில் அசௌகரியமாக காணப்பட்டார் ரோகித். உடனே, இந்திய அணியின் பிஸியோ தெரபி குழு மைனதானத்துக்கு ஓடிச் சென்றது. அப்போது அவருக்கு முதலுதவி கொடுக்கும்போது தொடைப் பகுதியில் தசைப்பிடிப்பு இருப்பதுபோல் காணப்பட்டார் ரோகித். பின்னர், முதுகு பகுதியில் பிடிப்பு ஏற்பட்டதை அறிந்து, அவரை களத்தில் இருந்து வெளியேறுமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். போட்டிக்குப் பிறகே தெரியவந்தது, ரோகித் சர்மா முதுகுப் பிடிப்பால் அவதிப்படுகிறார் என்பது. இதுகுறித்து பிசிசிஐ கொடுத்துள்ள விளக்கத்தில், இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு முதுகுப் பிடிப்பு இருக்கிறது. இதனால் அவர் முழுமையான மருத்துவர் கண்காணிப்பின் கீழ் இருக்கிறார்.
இப்போதைய சூழலில் பயப்படும் அளவுக்கான பிரச்சனைகள் ஏதும் இல்லை. ஆனால், தொடர் கண்காணிப்புக்கு பிறகே உறுதியான முடிவுகளை எடுக்க முடியும் எனத் தெரிவித்துள்ளது. அடுத்த போட்டிக்கு முன்பாக முழு உடற்தகுதியை எட்டிவிடுவார் என்றும் பிசிசிஐ நம்பிக்கை தெரிவித்துள்ளது. ரோகித் இல்லாதபோதும் 3வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி, வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது. சூர்ய குமார் யாதவ் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 44 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். அவருக்கு பக்க பலமாக ஷ்ரேயாஸ் அய்யர் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் விளையாடினர். இந்த வெற்றி மூலம் இந்திய அணி 2-1க்கு என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
மேலும் படிக்க | 20 ஓவர் உலகக்கோப்பையில் அஸ்வின் விளையாடுவாரா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ