ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! ஹர்பஜன் சிங் கலாய் டிவிட்!

சென்னை அணியைச் சேர்ந்த ஹர்பஜன் சிங், தனது டிவிட்டரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கிண்டல் செய்துள்ளார்.

Last Updated : Mar 24, 2019, 11:27 AM IST
ஆர்சிபி இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ! ஹர்பஜன் சிங் கலாய் டிவிட்! title=

சென்னை அணியைச் சேர்ந்த ஹர்பஜன் சிங், தனது டிவிட்டரில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை கிண்டல் செய்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் கோலகலமாக துவங்கிய IPL 2019 தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின.

இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. தொடக்கம் முதலே சென்னை அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தவித்து வந்த பெங்களூரு அணி அடுத்தடுத்த தங்கள் அணி வீரர்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

துவக்க வீராக களமிறங்கிய கோலி 6(12) ரன்களில் வெளியேற, அடுத்தடுத்து வந்த வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களுடன் வெளியேறினர். மறுமுனையில் துவக்க ஆட்டகாரராக களமிறங்கிய பார்த்திவ் பட்டேல் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 29(35) ரன்கள் குவித்தார். எனினும் ஆட்டத்தின் 17.1-வது பந்தில் அனைத்து விக்கெட்டையும் இழந்த பெங்களூரு அணி 70 ரன்கள் மட்டுமே குவித்தது.

சென்னை அணி தரப்பில்  ஹர்பஜன் சிங் மற்றும் இம்ராம் தாகிர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ரவிந்திர ஜடேஜா 2 விக்கெட்டுகள் வீழ்தினார்.

இதனையடுத்து 71 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. துவக்க வீரராக களமிறங்கிய வாட்சன் 0(10) ரன்னில் வெளியேறிய போதிலும், அம்பத்தி ராயுடு 28(42) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தார். இவருக்கு துணையாக சுரேஷ் ரெய்னா 19(21) ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதனையடுத்து ஆட்டத்தின் 17.4-வது பந்தில் 71 ரன்கள் குவித்த சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று IPL 2019 தொடரின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்நிலையில் ஆர்சிபி தோல்வி குறித்து ஹர்பஜன் சிங் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவிட் செய்து கிண்டல் செய்துள்ளார். அதில்,

ஹர்பஜன் சிங் னா டர்பன் கட்டிட்டு தமிழ்ல ட்வீட் போட்டு இருபேன்னு நெனச்சியா.பஜ்ஜி டா போய் பழைய @IPL ரெகார்ட் எடுத்து பாரு.பவர்புல் பீபுல் கம்ஸ் பிரம் பவர்புல் பிலேசஸ் சோ இஸ் @ChennaiIPL என்ன  @RCBTweets இந்த டிரிப் அடி கொஞ்சம் ஓவரோ!ரோல்லிங் சார்!தந்தானி நானே தானி தந்தானோ #CSKvsRCB

 

 

இவ்வாறு பதிவு செய்துள்ளார்.

Trending News