நேரலையில் காண கிளிக் செய்யவும்
Mumbai Indians vs Rajasthan Royals Match Updates: ஐபிஎல் 2020, எம்ஐ வெர்சஸ் ஆர்ஆர் டீம் 11 க்கு இன்று விளையாடுவதைக் கணித்துள்ளது லைவ் அப்டேட்டுகள்: ஐபிஎல் 2020 தொடரின் இன்றைய ஆட்டம் மும்பை அணி (Mumbai Indians) அட்டவணை வரிசையில் முதலிடத்திற்கு செல்வதற்கான வாய்ப்பாக இருக்கும். அதேநேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் தங்கள் வரிசையை மாற்றியமைக்க வேண்டியிருக்கலாம்.
கடைசி இரண்டு போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் (Rajasthan Royals) தோல்வியை தழுவியுள்ளது. அதேபோல மும்பை இந்தியன்ஸ் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை மும்பை இந்தியன்ஸ் ஆடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி, இரண்டில் தோல்வியும், ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய நான்கு போட்டிகளில் இரண்டு வெற்றி, இரண்டு தோல்வியை சந்தித்துள்ளன.
IPL 2020 புள்ளி அட்டவணை பட்டியலில், மும்பை இந்தியன்ஸ் 2வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 5வது இடத்திலும் உள்ளது. முதலிடத்தில் டெல்லி கேப்பிடல் உள்ளது.
இன்றைய போட்டியில் டாஸ் (Toss) வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.