IPL 2021 அட்டவணையில் முக்கிய மாற்றம், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மே மாதத்தில், கொரோனா வைரஸ் அதிகரிப்பு காரணமாக (Covid 19) BCCI ஐபிஎல் போட்டியை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டியிருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 28, 2021, 09:54 AM IST
  • ஐபிஎல் அட்டவணை இன்று அறிவிக்கப்படலாம்
  • ஐபிஎல் 2021 பற்றிய பெரிய புதுப்பிப்பு
  • தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் தொடர்பாக அபுதாபியின் அரசாங்கம் கண்டிப்பானது
IPL 2021 அட்டவணையில் முக்கிய மாற்றம், இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு title=

புதுடெல்லி: மீதமுள்ள IPL 31 போட்டிகள் UAE இல் செப்டம்பர் 19 முதல் அக்டோபர் 15 வரை ஏற்பாடு செய்யப்பட உள்ளன, இத்தகைய சூழ்நிலையில், ஐபிஎல் 2021 இன் அட்டவணையை BCCI இன்று அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

மே மாதத்தில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் (Covid 19) காரணமாக, BCCI போட்டியை காலவரையின்றி ஒத்திவைக்க வேண்டியிருந்தது. IPL 2021 போட்டி செப்டம்பர் 19 முதல் மீண்டும் தொடங்கும், அதன் இறுதிப் போட்டி தசராவின் நாளான அக்டோபர் 15 ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

ALSO READ | M.S. Dhoni: அசத்தும் புது லுக்குடன் சிம்லாவில் தோனி: வைரலாகும் புகைப்படங்கள்

தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் தொடர்பாக அபுதாபி அரசு கண்டிப்பானது
தனிமைப்படுத்தப்பட்ட விதிகள் குறித்து அபுதாபி அரசு மிகவும் கண்டிப்பானது. இது தொடர்பாக பிசிசிஐ அபுதாபி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்திய வீரர்கள் தங்கள் டெஸ்ட் தொடரில் விளையாடிய பின்னர் நேரடியாக இங்கிலாந்தை விட்டு வெளியேறுவார்கள், எனவே டி 20 போட்டிகளில் விளையாடுவதற்க்கு முன்பு அவர்கள் ஒரு நீண்ட தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை மேற்கொள்வது சாத்தியமில்லை.

ஐ.பி.எல் இன் மீதமுள்ள இரண்டாம் கட்ட போட்டி இந்தியாவிலேயே நடத்த ஏற்பாடு செய்யப்பட வேண்டும் என்று BCCI முயற்சித்தது, ஆனால் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை காரணமாக ஏற்பட்ட பேரழிவைக் கருத்தில் கொண்டு இந்த முயற்சி கைவிடப்பட்டது. இதைக்கிடையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டியின் அட்டவணை வெளியீட்டுக்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடம் உள்ளனர். மேலும் இந்த போட்டிகளில் என்ன மாதிரியான மறுசீரமைப்பு நடந்துள்ளது என்பதையும் ரசிகர்கள் அறிய விரும்புவார்கள்.

ஐபிஎல் 25 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும்
ஐபிஎல் 25 நாட்களுக்கு மட்டுமே நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஐ.பி.எல் போட்டியை வெற்றிகரமான நடந்த பி.சி.சி.ஐ மிகவும் கடினமாக உழைத்து வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | MS Dhoni: நண்பரின் உயிர் காக்க ஹெலிகாப்டரை அனுப்பினார் தோனி, உயிர் பிழைத்தாரா நண்பர்?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News