மும்பை: 2008-ம் ஆண்டில் தொடங்கிய ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. அதிரடியாக சரவெடி வெடுக்கும் இந்தப் போட்டிகளின் 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் நேற்றுத் தொடங்கியது.
2022- ஐபிஎல் போட்டியின் முதல் போட்டியில் ஜடேஜா தலைமையில் களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றுப் போனது.
முதலில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. பேட்டிங்கில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்க, கான்வே 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.
உத்தப்பா 28 ரன்கள், அம்பத்தி ராயுடு 15 ரன்களில் ரன், ஷிவம் துபே 3 ரன்கள் என தொடர்ந்து பேட்டிங் வரிசை சரிந்து வந்த நிலையில், 7 -வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய தோனி பொறுமையாக ஆடி, கடைசி ஓவர்களில் அதிரடியாக பேட்டிங் செய்தார்.
டோனி 38 பந்துகளில் 50 ரன்களுடனும் ஜடேஜா 28 பந்துகளில் 26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு 132 வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
KKR பந்துவீச்சாளர்கள் - உமேஷ் யாதவ் (2/20) மற்றும் வருண் சக்கரவர்த்தி (1/23) சிறப்பாக பந்துவீசி சென்னை சூப்பர் கிங்ஸை 131-5 என்று கட்டுப்படுத்தினர்,
உமேஷ் யாதவ் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்எஸ் தோனி அதிக ரன் அடித்து ஆரஞ்சு கேப்பை கைப்பற்றினார். கடந்த இரண்டு சீசன்களில் ரன்களில் இல்லாத முன்னாள் சிஎஸ்கே கேப்டன், ஐபிஎல் 2022 இன் சரியான தொடக்கத்தைப் பெற்றுள்ளார்,
அடுத்து களம் இறங்கிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர் அஜிங்க்யா ரஹானே சிறப்பாக விளையாடினார் (34 பந்துகளில் 44), சாம் பில்லிங்ஸ் (25). நிதிஷ் ராணா (20), ஷ்ரேயாஸ் ஐயர் (20 நாட் அவுட்) என ஆகியோரும் அணியின் வெற்றிக்கு உதவினார்கள்.
நான்கு விக்கேடுகளை இழந்த கேகேஆர் அணி, 132 ரன்கள் என்ற இலக்கை 18.3 ஓவர்களில் எட்டியது.
ஐபிஎல் 2022 ஸ்கோர்கள்: சென்னை சூப்பர் கிங்ஸ் -- 20 ஓவரில் 131-5 (எம்.எஸ். தோனி 50 நாட் அவுட், ராபின் உத்தப்பா 28; உமேஷ் யாதவ் 2/20)
கேகேஆர்: 18.3 ஓவரில் 133-4 (அஜிங்க்யா ரஹானே 44, சாம் பில்லிங்ஸ் 25; டுவைன் பிராவோ 3/20) 6 விக்கெட்டுகள்
மேலும் படிக்க | பிரம்மாண்டமாக தொடங்கிய ஐபிஎல் 2022 - வார்னேவுக்கு நினைவஞ்சலி
டுவைன் பிராவோ 4 ஆண்டுகளில் 20 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியன் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட்டுகளை (170) வீழ்த்திய லசித் மலிங்காவின் சாதனையை பிராவோ சமன் செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கே.எல்.ராகுலின் லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணியை மார்ச் 31ஆம் தேதியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஃபாஃப் டு பிளெசிஸின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை மார்ச் 30ஆம் தேதியும் எதிர்கொள்கிறது.
மேலும் படிக்க | தோனியின் நிறைவேறாத கனவை நனவாக்கப்போகும் 3 வீரர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR