Chennai Super Kings full squad: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) பட்டத்தை 6வது முறையாக வெல்லும் முயற்சியில் சென்னை அணி ஏலத்தில் முழுவீச்சுடன் களமிறங்கியது. செவ்வாய்க்கிழமை துபாயில் நடந்த வீரர்கள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) சில சிறந்த வீரர்களை அணியில் எடுத்தது. நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் டேரில் மிட்செல் சென்னை அணியின் மிக விலையுயர்ந்த வாங்குதலாக இருந்தது, அவரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சென்னை. மேலும் இந்திய வீரர் சமீர் ரிஸ்வியை ரூ.8.4 கோடிக்கு வாங்கியது அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. இந்திய ஆல்-ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் கேகேஆரில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சிஎஸ்கே அணியில் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.
தோனிக்கு பிறகு சென்னை அணிக்கு யார் கீப்பிங் செய்ய போகிறார் என்ற கேள்வி இருந்தது. இந்நிலையில் ஏலத்தில் ஒரு இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனை சென்னை அணி எடுத்துள்ளது. மிடில் ஆர்டரில் பேட் செய்யும் 18 வயதான இடது கை விக்கெட் கீப்பர் பேட்டர் ஆரவெல்லி அவனிசை அணியில் எடுத்துள்ளது சென்னை. கடந்த மாதம் நடந்த குவாட்ரங்குலர் தொடரின் ஒரு ஆட்டத்தில் தனது அசாதாரண முயற்சிக்காக சமீபத்தில் கவனத்தை ஈர்த்தார். 376 ரன்களைத் துரத்த, இந்தியா ‘A’ U19 அணி 95/5 என்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அவனிஷ், வெறும் 93 பந்துகளில் 163 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் 12 சிக்ஸர்களை விளாசினார் ஆரவெல்லி அவனிஸ். இவரின் அசாதாரண திறமையை கொண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அவரை அடிப்படை விலையான 20 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடி வருகிறார். இந்த ஆண்டு வினு மங்கட் டிராபியில், அவர் 6 இன்னிங்ஸ்களில் 148.10 ஸ்ட்ரைக் ரேட்டில் 274 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த மாதம் ஹைதராபாத் அணிக்காக அவனிஷ் லிஸ்ட் ஏ அறிமுகமானார். இந்தியாவுக்கான U19 ஆசியக் கோப்பையில் சமீபத்தில் இடம்பெற்ற இவர், அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் U19 உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல்-தேர்வு விக்கெட் கீப்பராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2024 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே வாங்கிய வீரர்கள்:
ரச்சின் ரவீந்திரா (ரூ. 1.8 கோடி)
ஷர்துல் தாக்கூர் (ரூ 4 கோடி)
டேரில் மிட்செல் (ரூ. 14 கோடி)
சமீர் ரிஸ்வி (ரூ 8.4 கோடி)
முஸ்தாபிசுர் ரஹ்மான் (ரூ. 2 கோடி)
அவனிஷ் ராவ் ஆரவெல்லி (ரூ. 20 லட்சம்)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:
மகேந்திர சிங் தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயீன் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி
சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்ட வீரர்கள்:
டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ