CSK vs RR Today Match Prediction in Tamil: இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடரின் இன்றைய (ஏப்ரல் 27, வியாழக்கிழமை) லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நேருக்கு நேர் மோதுகின்றன. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) இந்த சீசனில் இரண்டாவது முறையாக மோதத் தயாராகி வருவதால், ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் தொடர்கிறது.
ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணை:
இந்த சீசனில் ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் இடையே நடைபெற்ற போட்டியில் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. இருப்பினும், 7 போட்டிகளில் 5ல் வெற்றி பெற்றுள்ள சிஎஸ்கே அணி தற்போது ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணையில் முதல் இடத்தைப் பிடித்திருப்பதால், அதனை தக்கவைத்துக்கொள்ள வெற்றியை தொடர நினைப்பார்கள். மறுபுறம் ராஜஸ்தான் ராயல்ஸ் 7-ல் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் சூப்பர் கிங்ஸை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு களம் இறங்குவார்கள். கடந்த மூன்று போட்டிகளிலும் சிஎஸ்கே தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார். மறுபுறம், கடந்த இரண்டு போட்டிகளிலும் ராஜஸ்தான் அணி தோல்வியை தழுவியது.
இரு அணிகளின் கடைசி போட்டி நிலவரம்:
சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளின் முந்தைய போட்டிகளில், தேவ்தத் படிக்கல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரின் சிறந்த செயல்திறனை மீறி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) தோல்வியடைந்தது. மறுபுறம், அஜிங்க்யா ரஹானேவின் அற்புதமான ஆட்டம் மற்றும் டெவோன் கான்வேயின் உறுதியான பங்களிப்பின் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேருக்கு நேர் மோதியதில் அதிக வெற்றி யாருக்கு?
இரு அணிகளும் தங்களுக்குள் மொத்தம் 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளன. சிஎஸ்கே 15 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள 12 போட்டிகளில் ஆர்ஆர் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஐந்து போட்டிகளில், சிஎஸ்கே ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. நான்கு போட்டிகளில் ஆர்ஆர் வெற்றி பெற்றுள்ளது.
- சென்னை சூப்பர் கிங்ஸ்: 15 வெற்றி
- ராஜஸ்தான் ராயல்ஸ்: 13 வெற்றி
மேலும் படிக்க: "Captain Of IPL" ஐபிஎல்லில் மிகவும் வெற்றிகரமான கேப்டன்கள்! தோனி இல்லையா?
இன்றைய ஐபிஎல் போட்டியில் வெற்றி யாருக்கு சாத்தியம்?
இன்றைய போட்டி இரண்டு திறமையான அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளதால், இன்று இரவு பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெற சமமான வாய்ப்பு இருப்பதால், எந்த அணி வெற்றிபெறும் என்பது பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இன்றைய ஐபிஎல் போட்டி எப்போது, எங்கு பார்க்க வேண்டும்?
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டி இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் நேரடியாக ஒளிபரப்பப்படும் மற்றும் இந்தியாவில் ஜியோ சினிமா செயலி மற்றும் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சிஎஸ்கே மற்றும் ஆர்ஆர் போட்டி தொடங்கும். இந்த போட்டியில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு டாஸ் போடப்படும்.
ராஜஸ்தானை பழி தீர்க்குமா CSK...? Match 37 Preview#ZeeTamilNews #cskvsrr #matchpreview #iplmatch2023
full video : https://t.co/WTrpzFSDED
Android Link: https://t.co/3Qd30JcqXx
Apple Link: https://t.co/TNhzAUNkzw pic.twitter.com/KLeDZfXq5f— Zee Tamil News (@ZeeTamilNews) April 27, 2023
சவாய் மான்சிங் ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்ஆர்) அணிகள் மோதும் இன்றைய போட்டி ராஜஸ்தான் ராயல்ஸின் சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதாக இருந்ததில்லை. இங்கு சிக்ஸர் அடிப்பது மிகவும் கடினம். மற்ற ஐபிஎல் மைதானங்களை ஒப்பிடும்போது இங்கு அடிக்கப்படும் சிக்ஸர்களின் சராசரி மிகவும் குறைவு. ஐபிஎல் 2023ல் இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டுமே இந்த மைதானத்தில் நடந்துள்ளது.
மேலும் படிக்க: கொல்கத்தாவை வதம் செய்த சிஎஸ்கே... புள்ளிப்பட்டியலில் முதலிடம்!
சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம்:
இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சற்று சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இரு அணிகளும் தலா மூன்று ஸ்பெஷலிஸ்ட் ஸ்பின்னர்களுடன் ஆடுகளத்திற்கு செல்லலாம்.
சிஎஸ்கே vs ஆர்ஆர் போட்டியில் விளையாடும் சாத்தியமான 11 வீரர்கள் (கணிப்பு)
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஜேசன் ஹோல்டர், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.
சென்னை சூப்பர் கிங்ஸ்: டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டுவைன் பிரிட்டோரியஸ், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, ஆகாஷ் சிங்.
மேலும் படிக்க: ஐபிஎல் போட்டியால் காத்திருக்கும் ஆபத்து! சமாளிக்குமா பிசிசிஐ?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ