’இது கடைசி ஐபிஎல்-னு நான் சொல்லல’ - தல தோனி அறிவிப்பு: சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி

இது கடைசி ஐபிஎல் போட்டினு நான் இன்னும் முடிவு பண்ணவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அறிவித்திருப்பது சிஎஸ்கே ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : May 3, 2023, 08:24 PM IST
  • ஓய்வு சர்ச்சைக்கு தோனி முற்றுப்புள்ளி
  • நான் ஓய்வு பெறுகிறேன் என எங்கே சொன்னேன்?
  • தோனியின் இந்த கேள்வியால் ரசிகர்கள் மகிழ்ச்சி
’இது கடைசி ஐபிஎல்-னு நான் சொல்லல’ - தல தோனி அறிவிப்பு: சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி title=

சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்டஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி லக்னோவில் நடைபெற்றது. டாஸ் போடும்போது களத்தில் இருந்த தொகுப்பாளர் தோனியிடம், இது உங்களுடைய கடைசி ஐபிஎல், எப்படி உணர்கிறீர்கள்? என கேள்வி எழுப்ப, இதனை நான் இன்னும் சொல்லவில்லை, நீங்கள் தான் சொல்கிறீர்கள் என சிரித்துக் கொண்டே பதில் அளித்தார் தல தோனி. உடனே டேனி மோரிசன் ரசிகர்களை நோக்கி தோனி இந்த ஆண்டு ஓய்வு பெறவில்லை, அடுத்த ஆண்டும் விளையாடுவார் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என உற்சாகமாக அறிவிக்க, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆனந்தமடைந்தனர். 

சிஎஸ்கே - லக்னோ மேட்ச்

சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ போட்டி ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது. இந்த மைதானத்துக்கு வந்த தோனிக்கு அம்மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் சிறப்பான வரவேற்பும், நினைவு பரிசுகளும் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து டாஸ் போடப்பட்டதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. தோனி பந்துவீசுவதாக அறிவித்தார். லக்னோ அணியில் கேப்டன் ராகுல் காயம் காரணமாக விளையாடாத நிலையில் குருணால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார். பேட்டிங் இறங்கிய லக்னோ அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

மேலும் படிக்க | IPL 2023: லக்னோவை வேட்டையாடுமா சிஎஸ்கே... பிளேயிங் லெவனில் மாற்றம் தோனி - பிளான் என்ன?

ஆயுஷ் பதோனி அரைசதம்

லக்னோ அணி ஒரு கட்டத்தில் 44 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது. அப்போது களம் புகுந்த இளம் வீரர் அயுஷ் பதோனி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். அவரின் அரைசதத்தால் கவுரமான ஸ்கோரை எட்டிய லக்னோ அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களை எடுத்திருந்தது. அப்போது குறுக்கிட்ட மழை கடைசி வரை விடவே இல்லை. இதனால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் கொடுக்கப்பட்டன. இரு அணிகளும் தலா 11 புள்ளிகள் பெற்றிருக்கும் நிலையில், ரன்ரேட் அடிப்படையில் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் லக்னோ அணியும், 3வது இடத்துக்கு சென்னை அணியும் உள்ளன.

தோனி அறிவிப்பு 

முன்னதாக தோனியிடம் ஓய்வு குறித்து தொகுப்பாளர் டேனி மோரிசன் எழுப்பினார். டாஸ் போட வந்த தோனியிடம் கடைசி ஐபிஎல் சீசனை எப்படி உணர்கிறீர்கள்? என கேட்டார். இதற்கு சிரித்துக் கொண்டே பதில் அளித்த தோனி, இதுவரை நான் அப்படி கூறவில்லை, நீங்கள் தான் கூறிக் கொண்டிருக்கிறீர்கள் என பதில் அளித்தார். அதாவது அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாடுவேன் என்ற அவரின் பதிலால் மைதானத்தில் இருந்த சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.

மேலும் படிக்க  | ஐபிஎல் 2023-ல் இருந்து கே.எல் ராகுல் விலகல்? பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News