மும்பை: ஐபிஎல் 2023 போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ளன. ஐபிஎல் போட்டிகள் மார்ச் 31 ஆம் தேதி தொடங்குகிறது. ஏப்ரல் 2 ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. ஐந்து முறை பட்டம் வென்ற மும்பை அணி, கடந்த சீசனில் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. எனவே, இந்த சீசனில் ரோகித் சர்மா தலைமையிலான அணி கடுமையாக போராடவேண்டி இருக்கும். ஏனென்றால் ஐபிஎல் போட்டிக்கு முன்பே மும்பை அணியின் சில வீரர்களின் காயத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி திணறி வருகிறது. இந்த ஐபிஎல் சீசனில் காயம் காரணமாக நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார். அவருக்கு மாற்றாக நல்ல பந்து வீச்சாளரை களம் இறக்க ரோஹித் சர்மா ஆலோசித்து வருகிறார்.
இந்நிலையில், இந்தமுறை அர்ஜுன் டெண்டுல்கருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக் கூறப்படுகிறது. சமீபத்தில் அவரின் பர்பாமன்ஸ் நன்றாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஆல்ரவுண்டர் அர்ஜுன் டெண்டுல்கர்
அர்ஜுன் டெண்டுல்கர் ஒரு ஆல்ரவுண்டர். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கிலும் நன்றாக விளையாடக்கூடியவர். அர்ஜுன் டெண்டுல்கர் கடந்த இரண்டு சீசன்களாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வருகிறார். ஆனால் அவருக்கு மைதானத்தில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. மும்பை இந்தியன்ஸ் 2021 இல் அவரை அடிப்படை விலையில் வாங்கியது. கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் 30 லட்சத்துக்கு அவர் ஏலம் எடுக்கப்பட்டார். ஒரு ஆல்ரவுண்டரான அர்ஜுன் டெண்டுல்கருக்கு 11 பேர் பட்டியலில் இடம் கிடைக்கலாம்.
மேலும் படிக்க: IPL 2023: காயத்தால் ஐபிஎல் தொடரை தவறவிடும் வீரர்கள்... இதோ முழு லிஸ்ட்!
ரஞ்சி கோப்பை தொடரில் விளையாடிய அர்ஜூன் டெண்டுல்கர், தனது அறிமுக ரஞ்சி போட்டியில் சதம் அடித்தார். 7 முதல் தர போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். ஏழு போட்டிகளில் மொத்தம் 233 ரன்கள் எடுத்துள்ளார். ஒன்பது டி20 போட்டிகளில் 12 விக்கெட்டுகளையும் 20 ரன்களையும் எடுத்துள்ளார்.
அர்ஜுன் டெண்டுல்கருக்கு வாய்ப்பு
ஆல்-ரவுண்டராக அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை அணியில் இடம் பிடிக்கலாம். தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷானும் களமிறங்கலாம். அதன்பிறகு, டெவால்ட் ப்ரீவிஸ், நான்காவது இடத்தில் சூர்யகுமார் யாதவ், ஐந்தாவது இடத்தில் திலக் வர்மா, ஆறாவது இடத்தில் ஆல்ரவுண்டர் கேமரூன் கிரீன், ஏழாவது இடத்தில் உள்ள அர்ஜுன் டெண்டுல்கர் என மிடில் ஆர்டரில் வாய்ப்பு பெறலாம்.
மும்பை அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் பியூஷ் சாவ்லா, ஷம்ஸ் முலானிக்கு வாய்ப்பு கிடைக்கும். ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் ஆகியோர் வேகப்பந்து வீச்சாளராக இருக்கிறார்கள். எனவே பும்ராவின் இடத்தை நிரப்ப அர்ஜுன் டெண்டுல்கரை ரோஹித் சர்மா பரிசீலிக்கலாம்.
மேலும் படிக்க: IPL 2023: சிஎஸ்கே-வில் விளையாடப்போகும் 11 வீரர்கள்! லீக் ஆனா லிஸ்ட்!
மும்பை இந்தியன்ஸ் - கடைசி இடம்
ஐபிஎல் 2022 சீசனில் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் பத்தாவது இடத்தில் இருந்தது. போட்டியில் 14 போட்டிகளில் 4ல் மட்டுமே வெற்றி பெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.
மும்பை அணியில் விளையாடும் 11 பேர் பட்டியல்
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டெவால்ட் ப்ரூவிஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, கேமரூன் கிரீன், அர்ஜுன் டெண்டுல்கர், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஷம்ஸ் முல்லானி, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
மேலும் படிக்க: IPL Ticket Booking: IPL 2023 போட்டிக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் எடுப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ