ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் வெங்கடேச ஐயர் சிறந்த தேர்வா?

தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடருக்கான அணியில் வெங்கடேச ஐயர் இடம் பிடித்துள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Jan 10, 2022, 01:44 PM IST
  • ஐபிஎல்-ல் கலக்கிய வெங்கடேஷ் ஐயர், இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.
  • தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடருக்காக அணியில் இடம் பிடித்துள்ளார்.
ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் வெங்கடேச ஐயர் சிறந்த தேர்வா? title=

2021-ல் இந்திய அணிக்கு மிகவும் தேவைப்பட்ட ஆல்ரவுண்டர் மற்றும் பினிஷர் வீரராக வெங்கடேஷ் ஐயர் (venkatesh iyer) கிடைத்துள்ளார்.  ஐபிஎல்-ல் கலக்கிய இவருக்கு இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.  2015-ல் இருந்து மத்தியப் பிரதேசத்துக்காக விளையாடிக்கொண்டிருந்த வெங்கடேச ஐயர், தற்போது ஹர்திக் பாண்டியாவின் இடத்தில் இந்திய அணியில் விளையாடி வருகிறார்.   தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ODI தொடருக்காக அணியில் தற்போது இடம் பிடித்துள்ளார்.  

ALSO READ | IPL 2022: கொரோனாவும் ஐபிஎல்லும்! பிசிசிஐயின் PLAN B

இந்திய அணியில் விளையாடுவது குறித்து அவரிடம் கேட்டபோது, " இது ஒரு அற்புதமான அனுபவம், ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் நாட்டுக்காக விளையாட விரும்புகிறார்கள். எனக்கும் அப்படித்தான், அது நடந்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அணியில் எல்லோரும் என்னை வரவேற்றார்கள்.  நான் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தாமல் பந்துவீச்சும் செய்ய வேண்டும் என்று கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் விரும்புகிறார்கள்.   எனக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், நான் நிச்சயமாக எனது சிறந்ததை வழங்க முயற்சிப்பேன். 

நான் பவுன்சி டிராக்குகளில் நிறைய விளையாடியிருக்கிறேன், உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடுவதில் சிறந்த விஷயம் என்னவென்றால், கூடுதல் பவுன்ஸ் இருக்கும் நிறைய டிராக்குகாலில் விளையாட வாய்ப்பு கிடைக்கும்.   ஹர்திக் பாண்டியா இடத்தில் நான் வந்துள்ளேன் என்று கூறுகின்றனர்.  ஆனால், நான் யாருடைய இடத்தையும் நிரப்ப வரவில்லை,  அணியின் வெற்றிக்கு பங்களிக்க விரும்புகிறேன், அதுவே எனது எண்ணம்.  நான் பேட்டிங் மற்றும் பந்துவீச முடியும் என்பதால் அணியில் இருக்கிறேன் என்று நம்புகிறேன். 

நான் நீண்ட காலமாக மிடில் ஆர்டரில் பேட் செய்துள்ளேன். கடந்த இரண்டு வருடங்களாக நான் ஒரு தொடக்க வீரராக இருந்தேன். சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே டிராபியில் கூட மிடில் ஆர்டரில் பேட் செய்தேன், அதனால் எங்கு களம் இறங்கினாலும் எனக்கு புதியதாக இருக்காது.  ஐபிஎல்லில் மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடினேன். வாய்ப்பு கிடைத்தால் நன்றாக செய்வேன் என்று எனக்கு தெரியும். இது எனது முதல் சீசன், என்ன நடந்தாலும் அதனை பொருட்படுத்தாமல், ஒவ்வொரு நொடியையும் ரசிக்க வேண்டும் என்ற மனப்போக்குடன் நான் விளையாடினேன்" என்று கூறினார்.  

ALSO READ | தோனியை கலாய்த்த KKR! தக்க பதிலடி கொடுத்த ஜடேஜா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News