ஐபிஎல் 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ்
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இந்த சீசன் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. முதல் மூன்று போட்டிகளிலும் இந்த அணி தோல்வியை சந்தித்து இருக்கிறது. சன்ரைசர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளிடம் தோற்று இப்போது புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருக்கிறது. அடுத்த போட்டி ஏப்ரல் 7 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோத இருக்கிறது. அப்போட்டியிலாவது இந்த சீசனின் முதல் வெற்றியை பெற வேண்டும் என்ற முனைப்புடன் மும்பை இந்தியன்ஸ் அணி இருக்கிறது.
மேலும் படிக்க | Mayank Yadav: மயங்க் யாதவின் வேகத்தில் வீழ்ந்த ஆர்சிபியின் மேக்ஸ்வெல், கிரீன்
இஷான் கிஷனுக்கு கொடுத்த தண்டனை
இதனையொட்டி மும்பை இந்தியன்ஸ் அணி டீம் மீட்டிங் போட்டுள்ளது. அதில் இஷான் கிஷன், குமார் கார்த்திகேயா, நுவான் துஷாரா உள்ளிட்ட வீரர்கள் அந்த கூட்டத்துக்கு தாமதமாக சென்றுள்ளனர். அவர்களுக்கு மும்பை அணி நிர்வாகம் வித்தியாசமான தண்டனை கொடுத்துள்ளது. அந்த வீடியோவை இப்போது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் எக்ஸ் உள்ளிட்ட சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளது. அதில், மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இஷான் கிஷன், குமார் கார்த்திகேயா, நுவான் துஷாரா ஆகியோர் சூப்பர் மேன் உடையில் ஹோட்டல் ரூமில் இருந்து விமான நிலையத்துக்கு செல்கின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் வெளியிட்ட வீடியோ
அதாவது, டீம் மீட்டிகுக்கு தாமதமாக வரும் மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் இனி சூப்பர்மேன் உடையை அணிந்து கொண்டு தான் பயணிக்க வேண்டும் என அந்த அணி தண்டனை விதித்துள்ளது. அதன்படி டீம் மீட்டிங்குக்கு தாமதமாக வந்த இஷான் கிஷன், குமார் கார்த்திகேயா, நுவான் துஷாரா உள்ளிட்ட வீரர்களை சூப்பர் மேன் உடையை அணிய வைத்துள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம். அவர்கள் அனைவரும் அந்த உடையில் வீரர்கள் ஹோட்டல் அறையில் இருந்து விமான நிலையம் வரை சென்றனர். அப்போது நடைபெற்ற கலகலப்பான நிகழ்வுகளை தொகுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பகிர்ந்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் சலசலப்பு
மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் கேப்டன்சி மாற்றம் விவகாரத்தில் ஏற்பட்ட சலசலப்பு இன்னும் தீரவில்லை. ரோகித் சர்மா இன்னும் அணி நிர்வாகத்தின் மீது அதிருப்தியில் தான் இருக்கிறார். அதேபோல் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்றதை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. கடந்த மூன்று போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கடுமையாக கிண்டலடித்தனர். இதில் அவர் மன உளைச்சல் அடைந்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் டெல்லிக்கு ஏதிரான போட்டிக் முன்பாக இவையணைத்தையும் நிவர்த்தி செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி முயன்று கொண்டிருக்கிறது.
மேலும் படிக்க | ரூட்டை மாற்றிய ஆர்சிபி! பிளானை ஓபனாக சொன்ன கேப்டன் டூபிளெசிஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ