ஐபிஎல் 2024 தொடர் ஆரம்பம் முதலே அதிரடியாகவும், அமர்களமாகவும் இருக்கிறது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பின் உட்சத்துக்கு சென்ற நிலையில், ஐபிஎல் பிளே ஆஃப் இடங்களை அவ்வளவு எளிதாக எந்த அணியும் இம்முறை உறுதி செய்துவிடவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற 68வது லீக் போட்டிக்கு பிறகு தான் ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் விளையாடும் நான்கு அணிகளின் விவரமும் உறுதியாக தெரிந்தது. அந்தளவுக்கு இம்முறை போட்டி கடுமையாக இருந்தது. அதேநேரத்தில் நான்காவது இடத்தை மட்டுமே ஆர்சிபி உறுதி செய்திருக்கிறது. எஞ்சிய மூன்று இடங்களுக்கான போட்டி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த மூன்று இடங்களுக்கும் கொல்கத்தா, சன்ரைசர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி இருக்கிறது.
மேலும் படிக்க | பிளே ஆப் சென்றது ஆர்சிபி... தோல்வியுடன் விடைபெறுகிறாரா தோனி - வெளியேறிய சிஎஸ்கே!
ஆர்சிபி அணி இந்த ஐபிஎல் தொடரில் ஆடிய விதம் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எப்போதும் நினைவுகூரும் வகையில் இருக்கும். அந்த அணி தொடர்ந்து 6 ஆட்டங்களில் தோல்வியடைந்து ப்ளே ஆஃப் ரேஸிலிருந்து வெளியேறியதாக கருதப்பட்ட நிலையில், அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டும் வெற்றி பெற்று யாரும் எதிர்பார்க்காத கம்பேக்கை கொடுத்து இப்போது பிளே ஆஃப் சுற்றுக்கான இடத்தையும் உறுதி செய்திருகிறது. ஆர்சிபி கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டியிருந்தது. அந்த நெருக்கடியையும் சமாளித்தது அதிசயம் செய்தது ஆர்சிபி.
பிளேஆஃப் பந்தயம் முடிவடையவில்லை
முதல் நான்கு அணிகள் ஐபிஎல் 2024 பிளேஆஃப்களில் தங்கள் இடத்தை உறுதிப்படுத்தியுள்ளன, ஆனால் தகுதி மற்றும் எலிமினேட்டர் அணிகளின் பெயர்கள் கடைசி லீக் போட்டிக்குப் பிறகே முடிவு செய்யப்படும். 19 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி முதலிடத்தில் இருப்பதால் தகுதிச் சுற்றுக்கு (குவாலிபையர் 1) விளையாடுவது உறுதி. அந்த அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடிக்கும் அணியுடன் இப்போட்டியை விளையாடும். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கொல்கத்தாவையும் எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகளுக்குப் பிறகு ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுகள் முடிவு செய்யப்படும்.
ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியல்
தற்போது, புள்ளிப்பட்டியலில் கொல்கத்தா முதலிடத்திலும், ராஜஸ்தான் அணி 2வது இடத்திலும் உள்ளன. ஐதராபாத் மூன்றாவது இடத்திலும், பெங்களூரு நான்காவது இடத்திலும் உள்ளன. ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் தங்களின் கடைசி ஆட்டங்களில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலின் நிலை அப்படியே இருக்கும். ராஜஸ்தான் தோற்று ஹைதராபாத் வெற்றி பெற்றால் அந்த அணி இரண்டாவது இடத்துக்கு செல்லும். அதாவது ராஜஸ்தான் மூன்றாவது இடத்தையும், ஹைதராபாத் இரண்டாவது இடத்தையும் அடையும். ஹைதராபாத் தோற்று ராஜஸ்தான் வெற்றி பெற்றால் தற்போதைய நிலையில் எந்த மாற்றமும் இல்லை. அந்தவகையில் ஆர்சிபி - சன்ரைசர்ஸ் அல்லது ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட வாய்ப்புள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ