மிஸ் பண்ணிடீங்களே ரோகித்! ஏங்கும் ரசிகர்கள்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பெற்ற கேப்டன் என்ற பாண்டிங் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நூலிழையில் நழுவ விட்டார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 11, 2022, 08:14 PM IST
  • சாதனையை தவறவிட்ட ரோகித் சர்மா
  • அதிக வெற்றிகளை பெற்ற ரிக்கி பாண்டிங்
  • நூலிழையில் தவறவிட்டுவிட்டார்
மிஸ் பண்ணிடீங்களே ரோகித்! ஏங்கும் ரசிகர்கள்  title=

ரோஹித் சர்மாவின் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்துள்ளது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்ற இந்திய அணி, 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி அசத்தியுள்ளது. முதல் போட்டியில் 50 ரன்கள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்ற இந்திய அணி, 3வது போட்டியில் தோல்வியை தழுவியது. 

இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தால், கிரிக்கெட் உலகில் மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்திருப்பார் ரோகித் சர்மா. ஆனால் நூலிழையில் அந்த வாய்ப்பை தறவிட்டு விட்டார். 

ரோகித் சாதனை

இந்திய அணியின் அனைத்து வடிவிலான கிரிக்கெட் அணிகளுக்கும் ரோகித் சர்மா தலைமையேற்ற பிறகு, இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோறகாமல் இருந்தது. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி விளையாடிய 19 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்திருந்தது. தொடர்ச்சியாக 19 வெற்றிகளைப் பெற்ற முதல்  இந்திய கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான அவர், கேப்டனாக ரிக்கி பாண்டிங் செய்திருக்கும் சர்வதேச சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டார். ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி தொடர்ச்சியாக 20 வெற்றிகளை பதிவு செய்தது. இதன்மூலம் ஒரு கேப்டனாக தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருக்கிறார் ரிக்கி பாண்டிங்.

மேலும் படிக்க | பாண்டிங் சாம்ராஜ்ஜியத்துக்குள் நுழையும் ரோகித் சர்மா

தொடரும் பாண்டிங் சாதனை

ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியதன் மூலம் அந்த சாதனையை சமன் செய்யும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டுவிட்டார். அதிக வெற்றிகளை தொடர்ச்சியாக பெற்ற 2வது கேப்டன் என்ற சாதனை மட்டுமே இப்போது ரோகித் வசம் சென்றடைந்தது.     

தொடர்ச்சியாக அதிக சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற்ற கேப்டன்கள்

20 - ரிக்கி பாண்டிங் (2003)
19 - ரோஹித் சர்மா (2019/22)*
16 - ரிக்கி பாண்டிங் (2006/07)

ரோகித் சர்மாவின் மற்றொரு சாதனை

தன்னுடைய பெயரில் மற்றொரு சாதனையையும் படைத்துள்ளார் ரோகித் சர்மா. இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் தொடர்ந்து 14 டி20 சர்வதேசப் போட்டிகளில் வெற்றி பெற்ற முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார். ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, வங்கதேசம் (2 போட்டிகள்), நியூசிலாந்து (4 போட்டிகள்), மேற்கிந்திய தீவுகள் (3 போட்டிகள்), இலங்கை (3 போட்டிகள்), இங்கிலாந்து (2) ஆகிய அணிகளை தோற்கடித்துள்ளது.

மேலும் படிக்க | இதுவரை யாரும் செய்திராத சரித்திர சாதனை புரிந்த ரோஹித் சர்மா!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News