இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான ரோகித் ஷர்மா, அண்மையில் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் பதவியும் தேடி வந்தது. கேப்டனாக பொறுப்பேற்ற முதல் இருபது ஓவர் தொடரிலேயே சிறப்பாக செயல்பட்ட அவரது தலைமையிலான இந்திய அணி, நியூசிலாந்து அணியை 3 இருபது ஓவர் போட்டிகளிலும் வீழ்த்தியது. இந்த தொடருக்குப் பிறகு தான் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
ALSO READ India Win: முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்திய அணி..!
அப்போது, இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட் நீக்கப்பட்டு, ரோகித் நியமிக்கப்பட்டார். அதனால், பல்வேறு சர்ச்சைகளும், யூகங்களும் எழுந்தன. விராட் கோலிக்கும், ரோகித் ஷர்மாவுக்கும் இடையே மோதல் இருப்பதாக எல்லாம் செய்திகள் வெளியாகின. அந்த நேரத்தில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் விலகுவதாக பிசிசிஐ அறிவித்ததால், மேலும் யூகங்கள் அணி வகுத்தன. ஆனால், விராட்கோலி செய்தியாளர்களை சந்தித்து அதற்கு விளக்கம் கொடுத்தார். ரோகித் காயம் காரணமாகவே தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஆடவில்லை என்றும் கூறினார்.
மேலும், வதந்திகளை கடுமையாக சாடினார். இதற்கிடையே, ரோகித் ஷர்மா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிகெட் அகாடமியில் உடல் தகுதியை மேம்படுத்தும் பயிற்சிகளில் ஈடுபட்டார். லேட்டஸ்ட் அப்டேட்டின்படி, அவர் இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கும் ரோகித், தொடர்ந்து அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். அவர் உடல்தகுதியை எட்டிவிடுவார் என்று பிசிசிஐ -யும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ALSO READ | சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் நியூசி., ஜாம்பவான்..!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR