சர்வதேச கிரிக்கெட்டில் நியூசிலாந்து அணிக்காக 16 ஆண்டுகள் விளையாடிய ராஸ்டெய்லர் தற்போது அடுத்த இன்னிங்ஸை தொடங்கியிருக்கிறார். கிரிக்கெட்டில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற அவர், தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதி வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருக்கும் கருத்துகள் நியூசிலாந்து கிரிக்கெட் மட்டுமல்லாது ஐபிஎல் தொடரில் புயலைக் கிளப்பியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் தொடர்களில் தான் சந்தித்த நிகழ்வுகளை வெளிப்படையாக குறிப்பிட்டுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட்டில் நிறவெறி பிரச்சனையை சந்தித்ததாக ராஸ்டெய்லர் தெரிவித்துள்ளார். அனைவரும் வெள்ளை நிற வீரர்களாக இருக்கும்போது தான் மட்டும் மாநிறம் கொண்டவராக இருந்ததால், பலமுறை அவமானங்களை சந்திக்க வேண்டியிருந்ததாக தெரிவித்துள்ளார். டிரஸ்ஸிங் ரூமில் கேலி கிண்டல்களை எதிர்கொண்டதாகவும் ராஸ் டெய்லர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்கப்பட்டதை தன்னால் நம்பவே முடியவில்லை எனக் கூறியிருக்கும் அவர், அன்றிரவு குடும்பமே மிகப்பெரிய மகிழ்ச்சியில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | ’நியூசிலாந்து கிரிக்கெட்டில் நிறவெறி கொடுமை’ ராஸ் டெய்லர் பரபரப்பு குற்றச்சாட்டு
மனைவி மற்றும் தாய், தந்தையுடன் அன்றிரவை மகிழ்ச்சியாக கொண்டாடியதாக கூறியிருக்கிறார். ஆனால், 2011 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடியபோது சில கசப்பான சம்பவங்களையும் ராஸ்டெய்லர் நினைவு கூர்ந்திருக்கிறார். அந்த ஆண்டு மொஹாலியில் நடைபெற்ற போட்டியில் டக்அவுட்டானதும், ராஜஸ்தான் உரிமையாளர்களில் ஒருவர், 3-4 முறை கன்னத்தில் செல்லமாக தட்டி, டக் அவுட்டாவதற்கு உங்களை எடுக்கவில்லை எனக் கூறியபோது மிகவும் கடினமாக இருந்ததாக ராஸ் டெய்லர் குறிப்பிட்டுள்ளார். கிரிக்கெட்டில் இருந்து விடை பெற்றிருக்கும் அவர், தற்போது ஆக்லாந்து நகரில் செயல்பட்டு வரும் ஈக்விட்டி கம்பெனியில் சீனியர் மக்கள் தொடர்பு மேனேஜராக பணியில் சேர்ந்திருக்கிறார். ராஸ் டெய்லரின் அடுத்த இன்னிங்ஸூக்கும் ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | ஓய்வை அறிவிக்காமலேயே முடிவுக்கு வந்த இந்திய வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ