Watch: பிரட் லீ பந்தில் பவுண்டரி - வின்டேஜ் சச்சின் ஷாட்

பிரட் லீ வீசிய 5ஆவது ஓவரின் 5ஆவது பந்தில் சச்சின் தனது டிரேட்மார்க் ஆஃப்-டிரைவ் ஷாட்டை ஆடி, பவுண்டரிக்கு துரத்தி அசத்தினார்.

Written by - Sudharsan G | Last Updated : Sep 29, 2022, 09:21 PM IST
  • நேற்று மழையால் நிறுத்தப்பட்ட இந்திய - ஆஸ்திரேலிய அரையிறுதிப் போட்டி இன்று தொடக்கம்
  • இந்திய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
  • இறுதிப்போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.
Watch: பிரட் லீ பந்தில் பவுண்டரி - வின்டேஜ் சச்சின் ஷாட்  title=

கிரிக்கெட்டில் இருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெற்று ஏறத்தாழ 10 ஆண்டுகள் நிறைவடைய இருக்கிறது. தற்போது, அவர் சாலை பாதுகாப்பு உலக தொடரில், இந்திய லெஜண்ட்ஸ் அணிக்கு கேப்டனாக உள்ளார். சாலை பாதுகாப்பு உலக தொடரின் இரண்டாவது சீசன் இந்தியாவின் 4 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மேற்கு இந்திய தீவுகள், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

நடப்பு சாம்பியனான இந்தியா இத்தொடரின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அதன்படி, முதல் அரையிறுதிப்போட்டியில் இந்திய லெஜண்ட் - ஆஸ்திரேலிய லெஜண்ட் அணிகள் நேற்று (செப். 28) மோதின. சத்தீஸ்கரின் ராய்ப்பூர் நகரில் உள்ள சாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில்,  டாஸ் வென்ற இந்திய முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

மேலும் படிக்க | உலகக்கோப்பை கனவு 'அம்போ' - இந்திய அணியில் இருந்து விலகும் முக்கிய வீரர்!

ஆஸ்திரேலிய அணி 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்தபோது, மழைக்குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. பின்னர், தொடர் மழை மற்றும் மைதானத்தில் நீர் தேங்கிய காரணங்களால், போட்டி இன்று ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து, இன்று மதியம் 3.30 மணிக்கு, நேற்று நிறுத்தப்பட்ட நிலையில் இருந்து போட்டி தொடங்கியது.

பேட்டிங் முடிவில் ஆஸ்திரேலிய அணி, 171 ரன்களை எடுத்தது. கேம்ரூன் வைட் 30 ரன்களுடனும், ஹாடின் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய அணி தரப்பில் யூசப் பதான், முனாஃப் படேல் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

மேலும் படிக்க | வயசானாலும்... அது மட்டும் மாறல - சின்ன தல ரெய்னாவின் மிரட்டல் கேட்ச்

தொடர்ந்து ஆடிய இந்திய அணி நமன் ஓஜாவின் சிறப்பான ஆட்டத்தால், 19.2 ஓவர்களிலேயே இழந்து இலக்கை அடைந்தது. மேலும், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறியது. போட்டியில், கேப்டன் சச்சின் டெண்டுல்கர் 10 ரன்களை மட்டும் எடுத்து ஆட்டமிழந்தார். 

மொத்தம் அவர் 2 பவுண்டரிகளை எடுத்திருந்தார். பிரட் லீ வீசிய 5ஆவது ஓவரின் 5ஆவது பந்தை சச்சின் எதிர்கொண்டார். அதில் தனது டிரேட்மார்க் ஆஃப்-டிரைவ் ஷாட்டை ஆடி, பவுண்டரிக்கு துரத்தினார். பிரெட் லீ - சச்சின் ஆகியோர் மேட்ச்அப்-ஐ காண, ரசிகர்கள் ஏங்கிக்கிடந்த நிலையில், சச்சினின் இந்த ஷாட்  பெரும் வரவேற்பை பெற்றது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இரண்டாவது அரையிறுதி போட்டியில் இலங்கை - மேற்கு இந்திய தீவுகள் நாளை (செப். 30) மோதுகின்றன. இதைத் தொடர்ந்து, நாளை மறுநாள் (அக். 1) இறுதிப்போட்டி நடைபெறுகிறது. 

மேலும் படிக்க | பார்ப்பதற்கே பல கோடி கண்கள் வேண்டும் - மாஸ்டர் பிளாஸ்டரின் மாஸான ஷாட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News