நான் தோல்வி அடைந்தால் திரும்பி வரமாட்டேன்.. அசாரிடம் சொன்ன சச்சின் டெண்டுல்கர்

சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தை நடுத்தர வரிசையில் இருந்து தொடங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் நவ்ஜோத் சிங் சித்து காயமடைந்ததால்,  அவருக்கு பதிலாக நியூசிலாந்திற்கு எதிராக முதல் முறையாக தனது இன்னிங்ஸைத் தொடங்கினார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 2, 2020, 07:02 PM IST
நான் தோல்வி அடைந்தால் திரும்பி வரமாட்டேன்.. அசாரிடம் சொன்ன  சச்சின் டெண்டுல்கர் title=

புது தில்லி: சச்சின் டெண்டுல்கர் தனது கிரிக்கெட் பயணத்தை நடுத்தர வரிசையில் இருந்து தொடங்கினார் என்பது அனைவருக்கும் தெரியும். மேலும் நவ்ஜோத் சிங் சித்து காயமடைந்ததால்,  அவருக்கு பதிலாக நியூசிலாந்திற்கு எதிராக முதல் முறையாக தனது இன்னிங்ஸைத் தொடங்கினார். ஆக்லாந்தில் இன்னிங்ஸைத் தொடங்குமாறு அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் மற்றும் மேலாளர் அஜித் வடேகரிடம் கேட்டுக் கொண்டதாக சச்சின் கூறியுள்ளார்.

தனது தனிப்பட்ட பயன்பாடான 100எம்பி-ல் பேசிய சச்சின், "காலையில் ஹோட்டலை விட்டு நாங்கள் வெளியேறும்போது, ​​நான் முதன்முதலாக இன்னிங்ஸைத் தொடங்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியாது" என்றார். நாங்கள் மைதானத்தை அடைந்தோம். அசார் மற்றும் வாடேகர் சார் ஆகியோர் டெர்னிங் அறையில் இருந்தனர். சித்து காயம் ஏற்பட்டுள்ளதால், அவரின் இடத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று ஆலோசனை செய்துக்கொண்டு இருந்தனர். 

அப்பொழுது, அவர்களிடம் "நான் அதை செய்வேன்" என்று சொன்னேன். எதிர் அணியின் பந்து வீச்சாளர்களை என்னால் தாக்க முடியும் என்று எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. அதனால் கூறினேன் என்று டெண்டுல்கர் தெரிவித்தார்.

ஒருவேளை நான் தோல்வியுற்றால், நான் உங்களிடம் திரும்பி வரமாட்டேன். ஆனால் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று அப்போதைய கேப்டன் முகமது அசாருதீன் மற்றும் மேலாளர் அஜித் வடேகரிடம் சொன்னேன் எனவும் கிரிக்கெட் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

அந்த போட்டியில் 49 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார் டெண்டுல்கர். இதன் பின்னர், சச்சின் ஒருநாள் அணியின் வழக்கமான தொடக்க வீரரானார்.

Trending News