ஐபிஎல் 2023: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ், தனது தாய்மொழியான ஆப்கானி மொழியில் நடிகர் ஷாரூக்கான் பேசுவதைக் கண்டு திகைத்து போய்விட்டார். ஆந்த வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டு, அதனது ஆச்சரியத்தை அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார். இந்த வீடியோ பலராலும் பார்க்கப்பட்டு வைரலாகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸ். ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 57 ரன்கள் எடுத்திருந்தார்.
அப்போது, ஷாருக்கான் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸை சந்தித்தார். பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் தன்னை முதல் முறையாக சந்திப்பவர்களையும் வசீகரம் படைத்தவர்.
அதிலும், அவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணியின் இணை உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட் நடிகர் ஷாருக் கான், நடிகை ஜூஹி சாவ்லா மற்றும் அவரது கணவர் ஜெய் மெஹ்தா ஆகியோர் கேகேஆர் அணியின் உரிமையாளர்களாக உள்ளனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டிக்குப் பிறகு, தனது அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரஹ்மானுல்லா குர்பாஸை ஷாரூக்கான் சந்தித்தபோது ஷாரூக்கானின் வசீகரமான திறமைகள் மீண்டும் வெளிப்பட்டன.
கிரிக்கெட் வீரர் குர்பாஸ் பேசும்போது, அவருக்கு பதிலளித்த ஷாரூக்கான், ஆப்கானி மொழியில் பேசியது, விளையாட்டு வீரருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஷாருக்கானைப் பாராட்டிய குர்பாஸ், இந்த சம்பவத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
"@iamsrk சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அவர் ஆப்கானிய மொழியிலும் பேசக்கூடிய ஒரு அழகான மனிதர்" என்று கேப்ஷனும் கொடுட்திருக்கிறார் குர்பாஸ். அதுமட்டும்மல், தனது தாய் மொழியில் முழு சம்பவத்தையும் ரஹ்மானுல்லா டிவிட்டரில் விவரித்தார்.
خوند کوي چې د نړی شهرت لرونکو په ژبه د خپل وطني ژبې الفاظ اورم
It was nice meeting @iamsrk . Such a lovely person he is and could speak afghan language as well pic.twitter.com/rothWLVhpJ
— Rahmanullah Gurbaz (@RGurbaz_21) April 8, 2023
குர்பாஸின் ட்வீட்டுக்கு ட்விட்டரில் மகிழ்ச்சி தெரிவித்த ரசிகர்கள் பலரும் அந்த செய்தியை பகிர்ந்ததால், உடனடியாக ஹிட் அடித்து வைரலானது..
பெங்களூரு அணிக்கு எதிராக KKR 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்த பிறகு, ஷாருக்கான் டிரஸ்ஸிங் அறைக்குச் சென்று வீரர்களைச் சந்தித்தார். ரஹ்மானுல்லா 44 பந்துகளில் 57 ரன்கள் விளாசி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் படிக்க | சிலிண்டர் டெலிவரி செய்பவரின் மகன் ரிங்கு சிங்! KKR ஆட்டநாயகனின் ஊக்கமளிக்கும் பின்னணி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ