உலக கோப்பை கிரிக்கெட் தொடரில்., இந்தியாவிற்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா 227 ரன்கள் குவித்துள்ளது!
இங்கிலாந்தில் நடைப்பெற்று வரும் கிரிக்கெட் உலக கோப்பை தொடரின் 8-வது லீக் ஆட்டம் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்து விளையாடியது.
துவக்க வீரர்களாக களமிறங்கிய ஆம்லா 6(9), குவிண்டன் டீ காக் 10(17) ரன்களில் வெளியேற, இவர்களை தொடர்ந்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற துவங்கினர். அணியில் அதிகப்பட்சமாக கிறிஸ் மோறிஸ் 42(34) ரன்கள் குவித்தார்.
India need 228 to win their #CWC19 opener! A fighting stand by Morris and Rabada has given South Africa something to defend.
FOLLOW #SAvIND LIVE https://t.co/BRFVfISGgy pic.twitter.com/64yw1AaqWf
— ICC (@ICC) June 5, 2019
இதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்த தென்னாப்பிரிக்கா 227 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் யுவேந்திர சாஹல் 4 விக்கெட், புவனேஷ்வர் குமார் மற்றும் பூம்ரா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதனையடுத்து 228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இந்தியா களம்காணுகிறது.