ஐபிஎல் 2024 சிஎஸ்கே முழு அணி: இந்தியன் பிரீமியர் லீக் 2024 ஏலம் (ஐபிஎல் ஏலம்) டிசம்பர் 19 அன்று துபாயில் நடந்தது. இந்த முறை ஏலத்தில், வீரர்களை விட அணிகளுக்கும் அதன் உரிமையாளர்களுக்கும் இடையே ஏலப் போர் அதிகமாக இருந்தது. மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு கேகேஆர் வாங்கியதும், பேட் கம்மின்ஸை ரூ.20.5 கோடிக்கு வாங்கியதும் ஐபிஎல் ஏலத்தில் புதிய வரலாறு படைத்தது. ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்கள் என்ற பெருமை அவர்களுக்கு சேர்ந்தது. இதற்கு முன்பு ஐபிஎல் 2023ல் ரூ.18.5 கோடிக்கு வாங்கப்பட்ட சாம் கர்ரன் தான் இதுவரை அதிக விலை கொண்ட வீரராக இருந்தார். அதாவது ஐபிஎல் 2023 ஏலத்துக்கு முன்பு வரை.
மேலும் படிக்க | ஹர்திக் பாண்டியா 'கல்தா' மும்பை இந்தியஸ் அணிக்கு பெரிய பிரச்னை - கேப்டனாகும் ரோஹித்?
இந்த சூழலில் மீண்டும் ஐபிஎல் லைம்லைட்டில் இந்திருக்கிறார் சுரேஷ் ரெய்னா. அவர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அந்த அணியின் ஆலோசகராக இருந்த கவுதம் காம்பீர் இப்போது கொல்கத்தா அணிக்கு சென்றுவிட்டதால் லக்னோ அணிக்கு புதிய ஆலோசகர் யார்? என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதற்கு சுரேஷ் ரெய்னாவுடன் அந்த அணி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இறுதிக் கட்ட பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருப்பதாகவும் விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
சுரேஷ் ரெய்னா ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார். தோனிக்கு அடுத்த இடத்தில் இருந்த அவரை ரசிகர்கள் குட்டி தல என்றே அன்போடு அழைத்து வந்தனர். சிறப்பான ஃபார்மில் இருந்த அவரை திடீரென சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விடுவித்தது. இதனை ரெய்னா சற்றும் எதிர்பார்க்கவில்லை. இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார் ரெய்னா. இதன் பின்னணியில் இருப்பது தோனி என ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆத்மார்த்தமாக ஆடிய வீரர் ரெய்னாவை தோனி கண்டுகொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர். ஜடேஜாவுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை ரெய்னாவுக்கு அவர் கொடுக்கவில்லை. அதனால் தான் ரெய்னா ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெற நேரிட்டதாக ஒரு குற்றச்சாட்டை வைத்திருக்கின்றனர். தோனி நினைத்திருந்தால் இன்னும் சில ஆண்டு காலம் ரெய்னா ஐபிஎல் தொடரில் விளையாடிருக்கலாம், ஆனால் அதற்கான வாய்ப்பை அவர் கொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ