அடுத்த ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்போது இருந்தே நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்லமா என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்லாது என்றும், இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாய் அல்லது இலங்கையில் நடத்த திட்டமிடப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப விருப்பமில்லை என்றும் கூறப்படுகிறது. தற்போது தயார் செய்யப்பட்டுள்ள அட்டவணைகளின்படி வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்திய அணி விளையாடும் அனைத்து போட்டிகளும் பாகிஸ்தானில் உள்ள லாகூரில் திட்டமிடப்பட்டுள்ளது.
இருப்பினும், பிசிசிஐ இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இலங்கை அல்லது துபாயில் போட்டிகள் திட்டமிடப்பட்டால் மட்டுமே கலந்து கொள்வோம் என்ற முடிவில் பிசிசிஐ உள்ளது. ஒருவேளை பாகிஸ்தானில் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி 2025ல் இருந்து இந்தியா விலக முடிவு செய்தால், இந்தியாவிற்கு பதிலாக வேறு ஒரு அணியை ஐசிசி சேர்க்கலாம். பொதுவாக ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கும். கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பை போட்டியில் முதல் 8 இடம் பிடித்த அணிகள் சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும். அதன்படி, இந்திய அணி இந்த தொடரில் இருந்து விலகினால் தரவரிசையின் அடிப்படையில் இலங்கை விளையாட வாய்ப்பு கிடைக்கும்.
தற்போது ஐசிசி வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கை அணி இடம் பெறவில்லை. இந்தியா விலகும் பட்சத்தில் இலங்கை அணி சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். இந்திய அணி கடைசியாக 2008ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட விரிசல் காரணமாக அதன் பிறகு இந்தியா அங்கு செல்லவில்லை. மேலும் இரண்டு அணிகளும் இருதரப்பு தொடர்களிலும் விளையாடுவதில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கடைசி இருதரப்புத் தொடர் இந்தியாவில் 2012ல் நடைபெற்றது. அதன் பிறகு இரு அணிகளும் ஐசிசி போட்டிகள் மற்றும் ஆசிய கோப்பையில் மட்டுமே மோதுகின்றன. இதனால் எப்போதும் இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே ரசிகர்களுக்கு விறுவிறுப்பு இருக்கும்.
மேலும் இதுவரை ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோல்வியை மட்டுமே சந்தித்து வந்தது. கடைசியாக 2021ம் ஆண்டு நடைபெற டி20 உலக கோப்பையில் இந்தியாவை முதல் முறையாக வீழ்த்தி இருந்தது. அதன் பிறகு நடைபெற 3 போட்டிகளும் இந்திய அணி வென்றது. அமெரிக்காவில் நடைபெற 2024 டி20 உலக கோப்பையில் கூட இந்திய அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்து இருந்தது. "இந்தியா 2025 சாம்பியன்ஸ் டிராபிக்காக பாகிஸ்தானுக்கு செல்லாது. எங்கள் போட்டிகளை துபாயிலோ அல்லது இலங்கையிலோ நடத்த ஐசிசியிடம் கேட்டு வருகிறோம்" என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். "சாம்பியன்ஸ் டிராபி விஷயத்தில் இந்திய அரசு என்ன சொன்னாலும் செய்வோம். இந்திய அரசு எங்களுக்கு அனுமதி அளித்தால் மட்டுமே நாங்கள் பாகிஸ்தான் செல்வோம்" என்று பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ஆனந்த் அம்பானி திருமண விழா... குடும்பத்துடன் வந்த கிரிக்கெட் வீரர்கள் - யார் யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ