Karthikai Masam Special: ஸ்ரீ மங்களகரமான குரோதி வருடம் தக்ஷனாயணம் காலம் நவம்பர் மாதம் 16 ஆம் தேதி சனிக்கிழமை கார்த்திகை நட்சத்திரம் கூடிய நாளில் 2024 ஆம் ஆண்டின் தமிழ் மாதமான கார்த்திகை மாதம் பிறக்கின்றது. உங்களுக்கு என்னென்ன பலன்கள் கார்த்திகை மாதம் கிடைக்கப் போகின்றது. கார்த்திகை மாதத்தில் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்று பார்ப்போம்.
கார்த்திகை மாத கிரகங்களின் செயல்பாடு
இந்த மாத துவக்கத்தில் கிரகங்களின் சஞ்சாரத்தை ஆராய்ந்து பார்த்தால் ரிஷபத்தில் குரு பகவான், கடகத்தில் செவ்வாய், கன்னியா ராசியில் கேது, விருச்சிகத்தில் சூரியனுடன், தனுசு ராசியில் சுக்கிரன், கும்பத்தில் சனிபகவான், மீனத்தில் ராகு என இந்த கார்த்திகை மாத தொடக்கத்தில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
கார்த்திகை மாதத்தின் நவக்கிரகங்களின் நிலை
இந்த கார்த்திகை மாதத்தில் நவக்கிரகங்களின் தலைவரான சூரியன் விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார். விருச்சிக ராசியில் சூரியன் புதன் இணைந்து முதல் ஆதித்யராஜ யோகத்தை உருவாக்குகின்றன.
வேசி யோகம்
இந்த மாதத்தில் சூரியனுக்கு இரண்டாம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கும் வேசியோகமும் உருவாகின்றது. இந்த வேசி யோகமானது நமது ஆன்மாவை குறிக்கும் சூரியனால் உருவாக்கப்பட்டது. ஒரு நபரின் ஜனகால ஜாதக கட்டத்தில் சூரியன் இருக்கும் ராசிக்கு அடுத்த ராசியான இரண்டாம் வீட்டில் சந்திரன் ராகு கேது ஆகிய கிரகங்களை தவிர்த்து மற்ற கிரகங்களில் ஏதேனும் ஒன்று அல்லது மொத்த கிரகங்களும் இருந்தால் அந்த ஜாதகருக்கு வேசி யோகம் உண்டாக்கிறது.
வேசி யோகத்தின் பலன்கள்
எந்த ஒரு விஷயத்தையும் மிக சரியாக திட்டமிட்டு அதற்கு உண்டான பணிகளை செய்து வெற்றி பெறுவார்கள். ஒவ்வொரு மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் வரும். ஆனால் கார்த்திகை மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரத்திற்கு ஒரு தனி சிறப்பு உண்டு. ஏனென்றால் அதைத்தான் நாம் திருக்கார்த்திகை என்று அடைமொழியுடன் அழைக்கின்றோம். சிலர் பெரிய கார்த்திகை என்றும் கூட சொல்வார்கள்.
கார்த்திகை மாத திருக்கார்த்திகை வழிபாடு
திருக்கார்த்திகை நாள் அன்று முருகப்பெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதோடு விரதம் இருந்து வழிபட்டால், அந்த முத்துக்குமரன் முத்தான வாழ்க்கையை நமக்கு அமைத்துக் கொடுப்பார். அப்படிப்பட்ட இனிய திருக்கார்த்திகை திருநாள் கார்த்திகை மாதம் 28 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது.
கார்த்திகை மாத பரணி தீப வழிபாடு
அதற்கு முதல் நாள் பரணி தீபம் ஆகும். பாவங்கள் போக்கும் பரணி தீப வழிபாட்டினை நாம் மேற்கொள்ள வேண்டும். பரணி நட்சத்திரம் அன்று, அதாவது கார்த்திகை 27 ஆம் தேதி (வியாழக்கிழமை) மாலையில் நம் வீட்டில் விளக்கேற்றி வைத்தால் உன்னதமான வாழ்க்கை அமையும். மறுநாள் ஆலயம் சென்று முருகப்பெருமான் சன்னதியில் வழிபட வேண்டும். அங்கு கவச பாராயணம் பாடுவது நல்லது. உங்கள் வீட்டில் நல்லெண்ணெயிலும் ஆறுமுக பெருமான் சன்னிதியில் இலுப்பை எண்ணையிலும் தீபம் ஏற்ற வேண்டும். வீட்டில் விளக்கேற்றும் பொழுது ஒரு படிக்கு மூன்று விளக்கு ஏற்ற வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
கார்த்திகை மாதத்தின் சிறப்பு
இந்த கார்த்திகை பதினெட்டாம் தேதி கடக ராசியில் செவ்வாய் வக்ரம் பெறுகிறார். அதே கார்த்திகை 18 ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மாதம் முழுவதும் ரிஷப ராசியில் குரு பகவான் வக்கிரம் பெற்று சஞ்சரிக்கின்றார். சனியும் செவ்வாயும் ஒருவரை ஒருவர் இந்த மாதம் முழுவதும் பார்த்துக் கொள்கிறார்கள். இந்த மாதம் பல ரசிகளுக்கு அதிர்ஷ்டமோ அதிர்ஷ்டம் தான்.
கார்த்திகை மாதத்தில் 30 நாட்களிலும் அதிகாலையில் நீராடி சிவ விஷ்ணு பூஜைகள் மற்றும் தீப தானம் செய்து வீட்டில் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வழிபட்டால் மகிழ்ச்சி உண்டாகும். அதாவது கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.
கார்த்தியை மாதம் பெயர்க்காரணம்
கார்த்தியை மாதம் கருமையான மேகங்களை கொண்டு அதிக அளவு மழை பொழியும் கார்காலம் ஆகும். காந்தல் பூக்கள் அதிகம் மலரும் மாதம் ஆதலால், இம்மாதம் கார்த்திகை என பெயர் பெற்றது.
மேலும் படிக்க - சூரிய பெயர்ச்சி... அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் இந்த 5 ராசிகள் - யார் யார் பாருங்க!
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை. பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ