ஆசிய விளையாட்டு 2018 போட்டியின் 50Kg மல்யுத்தம் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றுள்ளார்!
18_வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவின் ஜகார்த்தா மற்றும் பலேம்பங் நகரங்களில் கடந்த ஆகஸ்ட் 18 ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகின்றன.
இந்தி ஆசிய விளையாட்டு போட்டிகளில் சுமார் 45 நாடுகள் பங்கேற்றுள்ளது. செப்டம்பர் 2-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் தடகளம், டென்னிஸ், பேட்மிண்டன், மல்யுத்தம், குத்துச்சண்டை, ஆக்கி, கபடி உள்பட 40 வகையான போட்டிகள் நடைபெறுகிறது.
Wrestler Vinesh Phogat wins a gold medal in 50kg freestyle at #AsianGames2018 pic.twitter.com/zWESnOO5Hs
— ANI (@ANI) August 20, 2018
இந்நிலையில் இத்தொடரின் இரண்டாம் நாளான இன்று மகளிருக்கான 50Kg பிரிவு மல்யுத்தம் போட்டிகள் நடைப்பெற்று வருகிறது. இப்போட்டியில் ந்தியாவின் வினேஷ் போகத் தங்கம் வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் ஆசிய போட்டியில் தங்கம் வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.