Suya Sakthi Awards 2023: சுய சக்தி விருதுகள் 2023 துவக்க விழா இன்று சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பால்வளம் மற்றும் பால் பண்ணை வளர்ச்சித்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாம் நிறுவனத்தின் நிறுவனர் நடிகை சுகாசினி மணிரத்தினம் மற்றும் சேவ் சக்தி நிறுவனத்தின் நிறுவனர் நடிகை வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆறாம் ஆண்டாக நடக்க இருக்கும் நேச்சுரல்ஸ் வழங்கும் சக்தி மசாலாவின் 'சுயசக்தி விருதுகள் 2023' வீட்டில் இருந்தபடியே தொழில் முனையும் சாதனை இல்லத்தரசிகளை கெளரவிக்க இருக்கிறது. இந்த விருது விழா கடந்த 5 ஆண்டுகளில் 15,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களை ஆர்வத்துடன் பங்கேற்க வைத்து மிகப்பெரிய வெற்றியை எட்டியுள்ளார்கள். வீட்டில் இருந்தே தொழில்முனையும் சாதனை பெண்மணிகளிடம் இருந்து 12 பிரிவுகளின் கீழ் தேர்தெடுக்கப்படும் பெண்களுக்கு விருது வழங்கப்பட இருக்கிறது.
சுய சக்தி விருதுகள் 2023-கு எப்படி விண்ணப்பிப்பது?
விருப்பம் உள்ள பெண்கள் https:/homepreneurawards.com அல்லது www.suyasakthiawards.com ஆகிய தளங்களில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலும் படிக்க | திராவிட நிலப்பரப்பில் அகற்றப்பட்ட பாஜக... ஸ்டாலினின் அடுத்த பிளான் என்ன?
சாதிக்க விரும்பும் பெண்களுக்கு கௌரவம்
கல்வி, அரசியல், பொதுப்பணி, வணிகம் சார்ந்த சிறப்பு வல்லுநர்களும் பங்கு பெற்று கெளரவம் சேர்த்தனர். இந்த தளம் வணிக உதவியும் செய்து இந்த சமூகத்தில் சாதிக்க விரும்பும் பெண்களை கொண்டாடியும் கெளரவிக்கின்றது. மேலும் சுயசக்தி விருதுகள்- மாணவர் பதிப்பு YI - எங் இந்தியன்ஸ் உடன் இணைந்து கல்லூரி செல்லும் மாணவிகளின் சுயதொழில் தொடங்கும் கனவு, அதை செயல்படுத்துவதற்கான திட்டம், லாபம் ஈட்டும் வழிமுறைகளை வெளிப்படுத்தும் தளத்தையும் உருவாக்கியுள்ளது.
இந்த தளத்தில் மாணவிகளால் வழங்கப்படும் கருத்துகள் பரிசீலனை செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படும். கல்லூரி செல்லும் பெண்கள் /குழுக்கள் விண்ணப்பம் செய்யலாம். சுயசக்தி விருதுகள் மாணவர் பதிவு YI- எங் இந்தியன்ஸ் உடன் சேர்ந்து இவர்களின் கனவுகளை நிறைவேற்ற வருகிறது.
உயர்கல்வியில் பெண்கள்
இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ்,"நாகரீகம் வளர்ந்த காலத்தில் பெண்கள் குடும்பத் தலைவர்களாக இருந்த வரலாறு இருக்கிறது. அதன் பிறகு நாட்டில் பல்வேறு சமூக கட்டமைப்புகள் மாறி மாறி வந்ததில் பெண்கள் சந்தித்த கொடுமைகள் என்பது உலகத்தில் எந்தப் பகுதியிலும் நடக்காத ஒன்று.
ஒட்டுமொத்த இந்தியாவில் 24.1 சதவீதம் பெண்கள்தான் உயர் கல்விக்கு செல்கிறார்கள். ஆனால் தற்போது தமிழகத்தில் அரசு பள்ளியில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் புதுமைப்பெண் திட்டம் துவங்கிய பிறகு, 72 சதவீதம் பெண்கள் உயர்கல்விக்கு செல்கின்றனர்.
மூன்றாம் பாலினத்தவர்களை அங்கீகரிக்கும் திமுக அரசு
மூன்றாம் பால் இனத்தவருக்கு நமது சமூகம் மரியாதை இல்லாமல் பார்க்கிறது அது முற்றிலும் தவறு அது இயற்கையின் மாறுபாடு அதுபோல யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம். இன்னும் பள்ளிகளில் ஆசிரியர்கள் இரு பாலினம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் அது தவறு அரசாங்கமே மூன்றாம் பாலினத்தவர்களை அங்கீகரித்து இருக்கிறது. இதுபோல மற்றவர்களை ஒதுக்குவது வளரக்கூடிய சமூகத்திற்கு நல்லதல்ல" என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ