சென்னை சைதாப்பேட்டை ஆட்டு தொட்டி கூவம் ஆற்றில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது இதையடுத்து தீ அணைப்பு வீரர்கள் வரவழைக்க பட்டு இறந்த உடலை மீட்டனர். இறந்தவர் அணிந்த சட்டை பையில் இருந்த கைபேசியை காவல்துறை உயர் அதிகாரிகள் கைபற்றி உள்ளனர். விவரம் அறிந்து வந்த இறந்தவரின் சகோதரர் அடையாளம் காட்டினார்
இறந்தவர் பெயர் ராம்சிங் பிரசாத் (வயது 52) பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் சென்னை கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனியில் பணிபுரிந்துவந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன் பின்பு காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில்,கடந்த 26ஆம் தேதி அவர் காணாமல் போனதாக கிண்டி காவல் நிலையத்தில் ஒரு புகார் வந்துள்ளதாகவும் இறந்த நபர்க்கு திருமணம் ஆகி இரு பெண் குழைந்தைகள் உள்ளதாகவும் தெரியவந்தது. மேலும், இறந்து போனவரின் இரண்டு மகள்களுக்கும் திருமணம் முடிந்துவிட்டதாக சைதாப்பேட்டை காவல் துறை அதிகாரியிடம் இறந்தவரின் சகோதரர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | World AIDS Day: தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் அரசு சார்பில் எய்ட்ஸ் பேரணி
இதனையடுத்து உயிரிழந்தவரின் உடல் உடற்கூராய்வுக்காக அரசு ராயபேட்டை மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டது. உடற்கூராய்வுக்கு பிறகு இறந்தவர் தற்கொலை செய்துகொண்டாரா இல்லை கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவரும். இதுகுறித்து காவல் துறையினர் பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.
சில நாள்களுக்கு முன்பு கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்திற்கு அருகே மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்த அதிர்ச்சி அடங்குவதற்குள் தற்போது கூவம் ஆற்றில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க | சூறாவளிக்காற்று வீசும் - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
மேலும் படிக்க | எம்ஜிஆர் படம் வந்தால் போதும்... நினைவுகள் பகிர்ந்த மு.க. ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ