தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் கரூர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், வெண்ணைமலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு வந்த புஸ்ஸி ஆனந்திற்கு கரூர் கோவை நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்ததுடன், பந்தியில் அமர்ந்திருந்தவர்களுக்கு உணவு பரிமாறினார். பின்னர் பேசிய புஸ்ஸி ஆனந்த், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. நம் தொண்டனை அழைத்து ஒரு லட்சம் பணம் வேண்டுமா, தளபதியின் புகைப்படம் வேண்டுமா என கேட்டால், பணத்தை விட்டு விட்டு தளபதியின் புகைப்படத்தை எடுத்து செல்லும் தொண்டர்கள் தான் இருக்கிறார்கள்.
மேலும் படிக்க | புதிய ரேஷன் கார்டு விநியோகம் தொடக்கம் - சீக்கிரம் அப்ளை பண்ணுங்க
விரைவில் கரூர் மாவட்டம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விஜய் வருகை தர இருப்பதாகவும், உங்களை சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். வரும் 2026ல் நடக்கும் சட்டமன்ற தேர்தலில் இருக்கையில் விஜய்யை அமர வைக்க வேண்டும் என்பதே நோக்கம், அதற்காக அனைவரும் நன்றாக உழைக்க வேண்டும். இன்னும் 18 மாதங்கள் தான் இருக்கிறது" என்றார்.
நடிகர் விஜய்யை பொறுத்தவரை இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருக்கும் கோட் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தின் சூட்டிங் முடிந்ததும் மற்றொரு படத்தில் நடிக்கும் அவர், அதன்பிறகு முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தலாம் என திட்டமிட்டுள்ளார். அதிகபட்சம் 2025ஆம் ஆண்டு மே மாதம் முதல் முழுமையாக அரசியல் களத்துக்கு வர இருக்கிறார். அதுவரை பொதுச்செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் மூலம் நிர்வாகிகளை ஆக்டிவாக வைத்திருக்கும் வகையில் ஆரம்ப கட்ட பணிகளை செய்ய அறிவுறுத்தியிருக்கிறார் விஜய். அதன்தொடர்ச்சியாக தான் புஸ்ஸி ஆனந்த் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று விஜய் ரசிகர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.
மேலும் படிக்க | அரசு பள்ளி மாணவர்களுக்கு மாதம் ரூ.1000! யார் விண்ணப்பிக்கலாம்? யாருக்கு கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ