தெலுங்கு இனத்தை நான் குறிப்பிட்டு சொல்லவில்லை... நடிகை கஸ்தூரி திடீர் விளக்கம்!

Tamil Nadu Latest News Updates: பிராமணர்களுக்கான தனிச்சட்டம் கோரிக்கை குறித்த போராட்டத்தின் போது நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையான நிலையில் தற்போது அதற்கு அவர் விளக்கம் கொடுத்துள்ளார். 

Written by - Sudharsan G | Last Updated : Nov 4, 2024, 07:49 PM IST
  • தெலுங்கு மக்களுக்காக நான் பேசுகிறேன், எனக்கு அதற்கான உரிமை இருக்கிறது - கஸ்தூரி
  • பிராமணர்கள் தற்போது கீழே இழுத்து மேலே வரவிடாமல் தடுக்கிறீர்கள் - கஸ்தூரி
  • வீட்டிற்குள் தெலுங்கு பேசிக்கொண்டு திராவிடர் கழகம் என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் திமுக - கஸ்தூரி
தெலுங்கு இனத்தை நான் குறிப்பிட்டு சொல்லவில்லை... நடிகை கஸ்தூரி திடீர் விளக்கம்! title=

Tamil Nadu Latest News Updates: எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் அருகில் நடைபெற்ற பிராமணர்களுக்கான தனிச்சட்டம் கோரிக்கை குறித்து நேற்று (நவ. 3 ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி பேசியது சர்ச்சையை கிளப்பியது. அதற்கு விளக்கம் தெரிவிப்பதற்காக இன்று போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய நடிகை கஸ்தூரி,"அந்தப்புரம் குறித்து தெலுங்கு இனத்தை நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. திராவிட சிந்தாந்தம் பேசுபவர்களைத்தான் சொன்னேன். பிராமணர்களை சொல்பவர்களை தான்நான் சொன்னேன். ராஜா தர்பாரில் ஆடல் அரசியலுக்கு இசை மற்றும் சங்கீத வாத்தியங்கள் வாசிப்பவர்கள் எந்த சாதியை சேர்ந்தவர்கள்? என்று கலைஞர் குறிப்பிட்டு கேட்டார்" என கேள்வி எழுப்பினார். மேலும், திருப்பதி லட்டை தின்றவர்கள் தானே இனிமேல் நீங்கள் மாட்டுக்கறியை திங்கலாமே எனக் கூறிய போது ஊடகவியலாளர்கள் எங்கே சென்றீர்கள் என்றும் கேள்வி எழுப்பினார். 

தவறாக புரிந்துகொள்ளப்பட்டது...

தொடர்ந்து பேசிய அவர்,"கடவுள் மறுப்பு பேசக்கூடியவர்கள், நாத்திகம் பேசக்கூடியவர்கள் கொக்களிக்கின்றனர். சிறுபான்மையினர் பெரும்பான்மையினரை பழிவாங்கி பேசக்கூடாது. தெலுங்கு மக்களுக்காக நான் பேசுகிறேன், எனக்கு அதற்கான உரிமை இருக்கிறது. சுதாகர் ரெட்டி மற்றும் அமர்பிரசாத் என்னுடைய கருத்தை தவறாக புரிந்துகொண்டுள்ளனர். வீரபாண்டிய கட்டபொம்மன் நாயக்கன் தெலுங்கர்தான், ஆனால் தமிழர் இல்லை. இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர் அவர்.

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை 2500 ரூபாயாக அதிகரிக்குமா?

மக்களை தங்கள் வீட்டில் செய்வதை வெளியே சொல்லாமல் தாங்கள் சாமியை கும்பிட்டு விட்டு யாகம் செய்துவிட்டு வெளியே வந்து நாத்திகம் பேசுபவர்கள் திமுகவும் திராவிட கழகர்களும்தான். இங்கே இருக்கக்கூடிய திராவிட இயக்கங்களும், அரசியல் கட்சிகளும் இன்று அனைவரையும் பிரித்து பார்க்கின்றனர்.

பிராமணர்களை ஏன் தள்ளி வைக்கிறீர்கள்?

வீட்டிற்குள் தெலுங்கு பேசிக்கொண்டு திராவிடர் கழகம் என்று பேசிக் கொண்டிருப்பவர்கள் திமுக. முன் நாட்களில் பிராமண சமுகம் மேலே தான் இருந்தது. ஆனால் அதை தற்போது கீழே இழுத்து மேலே வரவிடாமல் தடுக்கிறீர்கள். எங்கள் அமைச்சரவையில் பார்ப்பானுக்கு இடமில்லை என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் பிராமணர்களை ஏன் தள்ளி வைக்கிறீர்கள். தமிழ்நாட்டு அரசியல் சம்பந்தப்பட்ட விஷயத்தை ஏன் தெலுங்கு மக்களிடம் பரப்புகிறீர்கள்" என்றார். 

நேற்றைய பிராமணர் சமூக போராட்டத்தின் போது," 300 வருடங்களுக்கு முன்பு மன்னர்களின் அந்தபுரத்து மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்கள், தெலுங்கு பேசுபவர்கள். அவர்கள் எல்லாம் இன்னைக்கு தமிழர்கள் இனம் அப்படினு சொல்லும்போது, எப்போவோ வந்த பிராமணர்களை எல்லாம் தமிழர்கள் இல்லைனு சொல்ல நீங்க யாருங்க தமிழர்கள்? நீங்க யாரு தமிழர்கள்?" என கஸ்தூரி பேசியிருந்தது சர்ச்சையாக உருவெடுத்தது.  

மேலும் படிக்க | என்ன நடக்கிறது திருவொற்றியூர் தனியார் பள்ளியில்? பள்ளி கூடமா? வாயு கூடமா?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News