2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் என்று மதுரையில் ஓபிஎஸ் பேட்டி அளித்துள்ளார். தேனி செல்வதற்காக சென்னையிலிருந்து வந்தே பாரத் ரயில் மூலம் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை ரயில் நிலையம் வருகை தந்தால் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், சின்னம்மா அவர்கள் எந்த இடத்திலும் அதிமுகவில் தன்னை இணைக்க வேண்டும் என எந்த வேண்டுகோளும் வைக்கவில்லை. அதிமுக பிரிந்து இருப்பதால் பத்து தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். கழகத் தொண்டர்கள் எம்ஜிஆர் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கம் மீண்டும் ஒன்றுபட வேண்டும் என்று கழகத் தொண்டர்கள் விரும்புகிறார்கள். அதைத்தான் நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.
மேலும் படிக்க | தமிழ்நாட்டில் எனக்கு பாதுகாப்பு இல்லை - ஜான் பாண்டியன் பேட்டி!
நாங்கள் யாரிடமும் ஜாதகம் கேட்கவில்லை, எங்களை இணைத்துக் கொள்ளுங்கள் என்று அவர்களாகவே சொல்லுகிறார்கள் அதனால் பிரச்சனை. ஏற்கனவே சொல்லிவிட்டேன் உதயகுமார் பேட்டிக் எல்லாம் பதில் சொல்லுகின்ற நிலையில் நான் இல்லை. சின்னம்மா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் கூட்டி யாரையும் முதலமைச்சர் ஆக்கினார் என்பது உங்களுக்கு தெரியும் அந்த நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி எப்படி நடந்து கொண்டார் என்பதும் உங்களுக்கு தெரியும் இந்த நேரத்தில் அதை கொச்சைப்படுத்த நான் விரும்பவில்லை. கட்சி இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் நடக்கும். 2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் என்பதை தெரிவித்தார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் அனைத்தும் தற்காலிக நிலையில்தான் உள்ளது. 1989இல் அதிமுக ஜெயலலிதா அணி ஜானகி அம்மையார் அணி என்றும் இருந்தது. 1990 முதலில் நடைபெற்ற தேர்தலுக்குப் பின்னால் தலைவர்கள் இணைவதற்கு முன்பே தொண்டர்கள் இணைந்து விட்டார்கள். அந்த சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது. தொடர் தோல்விக்கு காரணம் கலகம் தெரிந்திருப்பது தான் என்று தமிழக மக்களின் கருத்தாக உள்ளது. சின்னம்மா எடுக்கின்ற முயற்சியில் நல்ல முயற்சி அவரது சுற்றுப்பயணம் நல்ல முறையில் செல்ல வாழ்த்துகிறேன். அதிமுக மீண்டும் சட்டமன்றத்தில் புதுக் குழுவுடன் மலர வேண்டும் என்று நினைக்கின்ற அனைவரும் இணைய வேண்டும் சின்னம்மா மக்களின் கருத்துக்களை அறிய சென்று கொண்டிருக்கிறார். நான் இரண்டு வருடங்களாக உரிமைகளை மீட்க சென்று கொண்டிருக்கிறேன் இரண்டு பேரும் செல்லும் இலக்கு ஒன்றுதான்.
யாராக இருந்தாலும் தான் நடந்து வந்த பாதையில் திரும்பி பார்க்க வேண்டும். 2026 தேர்தலில் ஒன்றிணைந்தால் நீங்கள் எந்த இடத்தில் இருப்பீர்கள் என்று கேட்டதற்கு எனது ரத்தம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ரத்தம் என கூறினார். தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆட்சி சட்ட ஒழுங்கை காப்பாற்ற தவறிய ஆட்சி. போதைப் பொருள்களை கட்டுப்படுத்த முடியாத ஆட்சியாக இருக்கிறது என்பது அரசு நிகழ்வுகளில் வெளிப்பாடாக இருக்கிறது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ