கடலூர்: ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்ட செய்தியை டிவியில் பார்த்த கடலூர் மாவட்டத்தை (காந்தி நகர்) சேர்ந்த அதிமுக பிரமுகர் உயிரிழந்தார்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22-ம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் ரத்த ஓட்டத்தை சரிசெய்வற்காக ஆஞ்ஜியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த அதிர்ச்சியான செய்தியை கொண்டிருந்த கடலூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் தீடிரென மரணம் அடைந்தார்.
இந்நிலையில் அப்பல்லோ மருத்துவமனை டக்டர்ல்கள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும், மேலும் தங்கள் மிக சிறந்த முயற்சியை செய்து வருவகாவும் ட்விட் பதிவு செய்துள்ளார்.
பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை வட்டாரத்தில் குவிந்து வருவதால் தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டுள்ளனர். துணை ராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.