வரும் மக்களவை தேர்தலில் அதிமுக மற்றும் பாமக கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக மற்றும் பாமக கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது. அதில் ஏழு நாடாளுமன்ற தொகுதிகளில் பாமக போட்டியிட இருக்கிறது.
இந்த நிலையில் அதிமுக மற்றும் பாமக கூட்டணியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மிக கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதுவும் குறிப்பாக டாக்டர் ராமதாசை மிகவும் கடுமையான சொற்க்களால் தாக்கி பேசினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
ராமதாஸ் குறித்து ஸ்டாலின் கூறியாதாவதுது: அதிமுகவின் கதை என்ற பெயரில் புத்தகம் எழுதி அந்தக் கட்சியை கடுமையாக விமர்சித்த பெரியவர் இன்று அவர்களிடம் போய் உட்கார்ந்து கையெழுத்துப் போட்டு கூட்டணி வைத்துள்ளார். வெட்கம் இல்லை, சூடு இல்லை, சொரணை இல்லை என்று கடுமையாக விமர்சித்தார். ராமதாஸ் அவர்கள் பணத்தின் மீது மற்றுமே குறிக்கோள் கொண்டவர். தங்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி மாறி மாறி கூட்டணி வைப்பது தான் பாமகவின் வழக்கம் என்றும் ஸ்டாலின் கூறினர்.