தமிழக பாஜகவில் மாநில ஐடி விங் தலைவராக இருந்த நிர்மல்குமார், அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். பின்னர், தான் ஏன் பாஜகவில் இருந்து விலகுகிறேன் என்று அறிக்கை ஒன்றையும் டிவிட்டரில் வெளியிட்டார். அதில், உண்மையாக உழைத்தேன், வேதனை மட்டும் தான் மிச்சம். தமிழக பாஜக தலைமை தொண்டர்களையும், கட்சியையும் செருப்பாக பயன்படுத்துகிறது. கட்சியை பற்றி துளியும் சிந்திக்காது, சொந்தக் கட்சி நிர்வாகிகளையும் தொண்டர்களையும் வேவு பார்த்து ஆனந்தம் அடைவதை போன்ற அல்பத்தனம் எதுவுமில்லை.
மேலும் படிக்க | அண்ணாமலை கீழ்ப்பாக்கம் போங்க .. ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி விளாசல்
அதையும் தாண்டி நம்பியிருக்கும் தொண்டர்களையும், கமலாலயத்தின் ஒவ்வொரு செங்கல்லையும் வியாபாரமாக்கி இடத்திற்கு ஏற்ப நடித்து ஏமாற்றி வரும் தலைமையை பார்த்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தது தான் மிச்சம். கட்சி அழிவை நோக்கி செல்வதை பார்க்க முடியவில்லை. நான் ஒரு அமைச்சருடன் கடுமையான சட்டப்போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்த அமைச்சரை வெளியில் வீராவேசமாக பேசிவிட்டு, திரைமறைவில் பேரம் பேசும் நபருடன் எப்படி பயணிக்க முடியும்?.
மொத்தத்தில் திராவிட மாடல் அமைச்சர்களையே மிஞ்சும்மளவிற்கு ஒரு 420மலையாக இருக்கும் நபரால் பாஜகவிற்கு மட்டுமல்ல, தமிழகத்திற்கும் கேடு என காட்டமாக வேதனையை வெளிப்படுத்தியிருந்தார். அவருக்கு பதில் அளித்த அண்ணாமலை அன்பு சகோதரர் நிர்மல்குமார் எங்கு சென்றாலும் உங்கள் பணி சிறக்கட்டும் என வாழ்த்தியிருந்தார். இந்நிலையில், அண்ணாமலையில் ஆதரவாளரான அமர்பிரசாத் ரெட்டி அதிமுகவில் நிர்மல் குமாரை இணைத்தற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆவேசமாக பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், பாஜகவின் கூட்டணி கட்சியாக இருக்கும் அதிமுக இதனை செய்திருக்கக்கூடாது. அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என கூறியிருக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஜனநாயக மரபுகளை காலில் போட்டு மிதித்து, முழுமையாக மக்களை விலை கொடுத்து வாங்கிய இரு பெரும் திராவிட இயக்கங்கள் ஜனநாயகம் குறித்து வாய் கிழிய பேசலாமா?, இனி அந்த சொல்லை இரு கட்சியினரும் பயன்படுத்தாமல் இருப்பதே அச்சொல்லுக்கான மரியாதை என கூறியுள்ளார் அமர்பிரசாத் ரெட்டி.
66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக தோல்வி அடைந்திருப்பது அங்கு துளியும் செல்வாக்கு இல்லை என்பதை காட்டுகிறது. கொங்கு மண்டலத்தை தங்கள் கோட்டையாக கருதியதை மறந்துவிட வேண்டியது தான். பாஜக மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம் என தெரிவித்துள்ளார். அவரின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள அதிமுகவினர், தங்கள் கட்சியின் முன்னாள் எம்எல்ஏவை கூட்டணியில் இருக்கும்போதே எப்படி உங்கள் கட்சியில் சேர்த்தீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் படிக்க | 420-மலை... அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட பாஜக நிர்வாகி - இபிஎஸ் மாஸ்டர் பிளான்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ