மறுமணத்திற்கு பெண் தேடும் ஆண்கள் - 'அம்பு விட்டு வம்பு செய்யும் ஆந்திர பெண்'

திருமணமாகி விவாகரத்து பெற்று மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களைக் குறி வைக்கும்  ஆந்திரப் பெண்... விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்..

Written by - Gowtham Natarajan | Last Updated : Jul 3, 2022, 01:22 PM IST
  • பெண் தேடும் ஆண்களை குறிவைக்கும் கில்லாடி
  • வித வித பெயர்களில் பலே மோசடி
  • போலீசில் சிக்கியவர் கொடுத்த அதிர்ச்சி தகவல்
மறுமணத்திற்கு பெண் தேடும் ஆண்கள் - 'அம்பு விட்டு வம்பு செய்யும் ஆந்திர பெண்'  title=

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த முத்து புதுப்பேட்டைப் பகுதியைச் சேர்ந்த இந்திராணி என்பவர் விவாகரத்து ஆன தனது மகனுக்கு மறுமணம் செய்வதற்காகப் பெண் தேடி வந்துள்ளார். இந்நிலையில், திருமணத் தரகர் மூலம் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த சந்தியா என்பவரை தனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணமான சில நாட்களிலேயே கணவரின் மாத வருமானம் , வீட்டின் பீரோ சாவி ஆகியவற்றை தன்னிடம்தான் கொடுக்க வேண்டும் என சொல்லி மாமியாரிடம் சண்டையிட்டுள்ளார்.

thiruvalluru marrige cheating, andhra laddy marriage cheating,marrige cheating,மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களைக் குறி வைக்கும் ஆந்திரப் பெண்,ஆந்திரப் பெண்,குறி வைக்கும்,மறுமணத்திற்கு காத்திருக்கும்,திருமண மோசடி, திருமணம் மோசடி, சந்தியா,சரண்யா, சுகன்யா

அதில், கணவன் பெயரில் உள்ள சொத்துக்களைத் தனது பெயருக்கு மாற்றித் தர வேண்டுமெனவும் அவர் அடம்பிடித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே சில தினங்களுக்கு முன் சரண்யா தனது மாமியாரை வீட்டை விட்டு துரத்தியிருக்கிறார். அதனால் மனமுடைந்த கணவர், சொத்துக்களை சந்தியாவின் பெயரிலேயே மாற்றித்தர முடிவெடுத்திருக்கிறார். அதற்காக சந்தியாவின் ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளார். சரண்யா ஆவணங்களைக் கொடுத்த போது அதில் C/O என்ற இடத்தில் ரவி என இருந்துள்ளது . இதில் சந்தேகம் அடைந்த கணவர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.

thiruvalluru marrige cheating, andhra laddy marriage cheating,marrige cheating,மறுமணத்திற்கு காத்திருக்கும் ஆண்களைக் குறி வைக்கும் ஆந்திரப் பெண்,ஆந்திரப் பெண்,குறி வைக்கும்,மறுமணத்திற்கு காத்திருக்கும்,திருமண மோசடி, திருமணம் மோசடி, சந்தியா,சரண்யா, சுகன்யா

உடனே அதுகுறித்து போலீசில் புகாரளித்திருக்கிறார். அதை தெரிந்து கொண்ட சந்தியா வீட்டிலிருந்து தப்பியோடி தலைமறைவாகியிருக்கிறார். புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய ஆவடி அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் ஜோலார்பேட்டையில் பதுங்கியிருந்த சந்தியாவை கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் உண்மை சம்பவங்கள் வெளிவந்தது. ஆந்திராவைச் சேர்ந்த சுகுணாவுக்கு ஏற்கனவே ரவி என்பவருடன் திருமணம் நடந்து இரண்டு மகள்கள் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வந்த சுகுணா வருமானம் ஏதும் இல்லாத காரணத்தினால் திருமண தரகர்கள் உதவியுடன் சரண்யா , சந்தியா என பெயரை மாற்றி மோசடியில் குதித்திருக்கிறார்.

மேலும் படிக்க |  கலெக்டர் போல மேசேஜ் அனுப்பி அவரின் உதவியாளரிடமே 'பணம் பறிப்பு' - கைவரிசை காட்டிய 'வடமாநில கும்பல்' !!

இந்த நிலையில், இந்திராணி மகனை திருமணம் செய்ய வயதைக் குறைத்துக் காட்டுவதற்காக அழகுநிலையத்துக்குச் சென்று முடியைத் திருத்தி அழகுபடுத்திக் கொண்டுள்ளார். இதேபோன்று, ஜோலார்பேட்டையை சேர்ந்த ரயில்வே உணவு காண்டராக்டரான சுப்ரமணியன் என்பவரை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சுகுணா,சந்தியா,சரண்யா என பல பெயர்களை பயன்படுத்தி பலரை திருமணம் செய்து கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதால் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் யார்யார் என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பல ஆண்கள் இவரின் வலையில் சிக்கி பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | 80'ஸ் கிட்ஸ்களின் Favorite பம்பாய் மிட்டாய் - இதெல்லாம் இன்னுமா கிடைக்குது ? ஆமாங்க!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News