செங்கல்பட்டு மாவட்டம் மேற்கு தாம்பரம் ஷண்முகம் சாலையில் உள்ள பிலிப்ஸ் மருத்துவமனை கட்டிடத்தில் தேனீக்கள் மிகப்பெரிய கூடு கட்டி இருந்தது. தேனீக்களை அப்புறப்படுத்த அந்த கட்டிட உரிமையாளர் சென்னை பாடி பகுதியில் இருந்து வடமாநில இளைஞர்களை வரவழைத்துள்ளார்.
அதன்படி இன்று அதிகாலை 5 க்கும் மேற்பட்ட வட மாநிலதவர்கள் தேன் கூட்டை அப்புறப்படுத்தும் பொருட்டு பணியைத் தொடங்கினர். அப்போது தேனிகளை விரட்ட தீ பந்தங்களும் பயன்படுத்தப்பட்டன. ஆனால் அப்போது யாரும் எதிர்பாராத நிலையில் தேன் கூட்டில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேனீக்கள் சாலைக்குள் பரவின.
இதை சற்றும் எதிர் பாராத மக்கள் தேனியிடம் இருந்து கடி வாங்காமல் இருப்பதற்கு சாலையில் அங்கும் இங்கும் தெறித்து ஓடினர். பின்னர் தேனீக்கள் சற்று கலைந்து சென்றதும், தேன் கூட்டின் இருந்த தேனை வடமாநிலத்தவர்கள் அதே கட்டிடத்திற்கு கீழ் வைத்து விற்பனை செய்து வந்தனர். இதனால் சில மணி நேரம் அந்த பகுதி முழுவதும் தேனீக்கள் சுற்றித் திரிந்தபடி காணப்பட்டன.
இதனால் தாம்பரத்தின் அப்பகுதியில் சிறிது நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மேற்கு தாம்பரம் காவல் துறையினர் கட்டிட உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின்னர் வடமாநில இளைஞரான ராம்சந்திரனை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
மேலும் படிக்க | தூத்துக்குடியில் இன்னொரு பயங்கரம் - காதல் திருமணம் செய்த தம்பதி கொலை !
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ