டெல்லியில் இருந்து மதுரை விமான நிலையம் வந்தடைந்த பிஜேபி தேசிய மூத்த தலைவர் எச் ராஜா மதுரை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த இரண்டு நாட்களாக திரு. அண்ணாமலை பற்றியோ மற்றும் மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பற்றியோ ராஜினாமா என்று கூறியதோ அனைத்துமே பத்திரிகையாளர்களை சந்தித்து கூறாத விஷயங்கள். அவை கசிந்த வார்த்தைகளை தவிர அவர்கள் முறையாக கூறியது அல்ல, எனவே இதை பெரிதும் பொருட்படுத்த வேண்டாம். கூட்டணி பற்றியோ வேட்பாளர்கள் பற்றியோ மாநிலத் தலைவர்கள் முடிவு செய்ய முடியாது. நாங்கள் சொன்னதே அறிவித்தாலும் சரி! அவர்கள் சொன்னதே அறிவித்தாலும் சரி! கூட்டணி குறித்தும் வேட்பாளர்கள் குறித்தும் மத்திய பாராளுமன்றம் முடிவு தான் இறுதியானது.
பிஜேபியின் ஆதரவாளர்களும் சரி தொண்டர்களும் சரி முழுமையான அறிவிப்பு வரும் வரை காத்திருக்க வேண்டும் அதற்கு முன்னதாக ஏதும் கட்டுக்கதைகளை பரப்ப வேண்டாம். திராவிட முன்னேற்றக் கழகமுடன்நாட்டி கசாயம் என்று நான் குறிப்பிட்டிருந்தேன். திமுக தொண்டர்களை திமுக அமைச்சர்கள் கல்லைக் கொண்டு அடிக்கிறது, மண்டையில் அடிக்கிறது இப்போது நடைபெற உள்ள திமுகவின் ஆட்சி கேங்ஸ்டர் என்று குறிப்பிடும் அளவில் உள்ளது. உடைந்த பானை ஒட்டாது திராவிட முன்னேற்ற கழகம் இனி ஒரு கட்சியாக தமிழகத்தில் இருக்காது. திமுகவின் டி.என்.ஏ மொத்தமாக மாறிப் போய் இருக்கிறது.
அதிமுக பிஜேபி கூட்டணி பிரச்சனை குறித்து தமாஷாக பேசிய ஏச்.ராஜா, தற்போது அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா என்று கூப்பிடுவோம். ஆனா அதுவரை அத்தையே அத்தை என்றே கூப்பிடுகிறோம்.இப்போது எங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி சக்கரிய பூத் உருவாக்குவது பணி மட்டுமே எனவே நாங்கள் அதை மேற்கொள்ள இருக்கிறோம் என்று கூறினார்.
மேலும் படிக்க | அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை புறக்கணியுங்கள் - முக்கிய தலைவர் பேச்சால் பரபரப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ