பாபிசிம்ஹாவை ஏமாற்றிய பொறியாளர்? 1.70 கோடியில் கட்டிய வீடு நாசம்!

கொடைக்கான‌ல் ப‌குதியில் பாபிசிம்ஹாவின் புதிய வீட்டை பாதுகாப்ப‌ற்ற‌ முறையில் க‌ட்டிய‌தாக‌வும், 3D முறையில் க‌ட்டிட‌ வ‌ரைப‌ட‌த்தினை காட்டி பொறியாள‌ர் த‌ன்னை ஏமாற்றிய‌தாக‌வும் பாபி சிம்ஹா பேட்டி அளித்துள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Sep 28, 2023, 10:59 AM IST
  • கொடைக்கானலில் வீடு கட்டும் பாபிசிம்ஹா.
  • பொறியாளர் தன்னை ஏமாற்றியதாக புகார்.
  • இது தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார்.
பாபிசிம்ஹாவை ஏமாற்றிய பொறியாளர்? 1.70 கோடியில் கட்டிய வீடு நாசம்! title=

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பேத்துபாறை பகுதியில் நடிகர் பாபி சிம்ஹா கட்டிடம் ஒன்று கட்டி வருகிறார். இந்த கட்டிடத்தை கட்ட தனது நண்பர் காதர் என்பவரின் உற‌வின‌ரான‌ யு.கே.வில் ஆர்க்கிடெக்ட் படித்து முடித்து வந்த ஜமீர் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூபாய் ஒரு கோடியே 70 லட்ச ரூபாய் மொத்தமாக ஒப்பந்தம் மூலம் கொடுக்கபட்டதாகவும் கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து தற்போது பாபி சிம்ஹா விடம் ஜமீர் முழு தொகையும் பெற்றுக் கொண்டு க‌ட‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளுக்கும் மேலாக‌ கட்டிட பணிகளை முடிக்காமல் பாதியிலேயே நிறுத்தி விட்டதாகவும் மீதி பணியினை தொடர வேண்டும் என்றால் கூடுதலாக 50 லட்சம் ரூபாய் கொடுத்தால் மட்டுமே முடித்து தருவேன் என கூறியதாகவும் பாபிசிம்ஹா த‌ர‌ப்பினரால் சொல்ல‌ப்ப‌டுகின்ற‌து. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகர் பாபி சிம்ஹா தான் கொடுத்த பணத்திற்கு முழுமையாக இன்னும் பணிகள் நடைபெறவில்லை என ஜ‌மீர் த‌ர‌ப்பின‌ரிட‌ம் பேச்சுவார்த்தையில் ஈடுப‌ட்ட‌தாக‌வும், ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஜ‌மீர் த‌ர‌ப்பின‌ர் குறித்த‌ நேர‌த்திற்கு வ‌ராம‌ல் இழுத்த‌டித்த‌துட‌ன் ஜ‌மீரின் உற‌வின‌ரான‌ உசேன் என்ப‌வ‌ர் மூல‌ம் த‌ன்னிட‌ம் பேச்சுவார்த்தையில் ஈடுப‌ட்டு கூடுத‌லாக‌ ப‌ண‌ம் கேட்ட‌தாக‌வும், அத‌னை தொடர்ந்து கட்டிட ஒப்பந்தகாரர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட நான்கு பேர் தன்னை  மிரட்டியதாக கூறி கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க | புலி போல் தலைவர் இருக்க புலிகேசியின் ஆதரவு எதற்கு! பாஜகவினர் அடித்த போஸ்டர்

இந்த நிலையில் இன்று கொடைக்கானலில் பாபி சிம்ஹா பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவ‌து, திண்டுக்க‌ல் மாவ‌ட்ட‌ம் கொடைக்கானல் பேத்துப்பாறை பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக தன‌து குடும்ப‌த்தின‌ர் வசித்து வருவதாகவும், தற்போது தனக்கு சொந்தமான இடத்தில் தனது தாய் தந்தைக்கு ஒரு வீடு கட்டித்தர வேண்டும் என தான் ஆசைபட்டத்தாகவும், இது வரை தான் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை கொண்டு புதிய வீடு கட்ட தனது நண்பர் காத‌ர் அளித்த உத்தரவாதத்தின் பேரில் ஜமீருக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் பேசி, இதில் கட்டிட பணிகள் கட்ட 70 லட்சம் ரூபாய் வங்கி கணக்கில் முன்பணமாக மாற்றியதாகவும் ஒரு கோடி ரூபாய் ரொக்க பணமாக கையில் கொடுத்ததாகவும் தெரிவித்தார், அத‌ற்குண்டான‌ ஆவ‌ண‌ங்க‌ள் த‌ன்னிட‌ம் இருப்ப‌தாக‌வும் தெரிவித்தார், மேலும் இதற்காக‌ ஜமீர் தன்னிடம் 3D முறையில் கட்டிடத்தின் வ‌ரைப‌ட‌ காட்சி பதிவை காண்பித்ததாக‌வும் தெரிவித்தார். 

ஆனால் அவர் உண்மையிலேயே இந்த கட்டிட பணிகளை முறையாக முடிக்காமல் தற்போது வரை 90 சதவிகித பணிகள் முடிவடைந்ததுள்ளதாக தெரிவித்து, மேலும் பணிகள் தொடர வேண்டும் என்றால் கூடுதலாக பணம் கேட்டு வந்ததாகவும், இன்னும் 50 சதவிகித பணிகள் கூட முழுமையாக‌, த‌ர‌மாக‌ நடைபெறவில்லை எனவும் மேலும் தனது தாய் தந்தை அவர்கள் வயதானவர்கள் என்பதால் வீட்டிற்குள் சென்று வ‌ர‌ கூடுதலாக லிப்ட் வசதி மற்றும் கேம்ப்ப‌ய‌ர் அமைப்பதற்கு வ‌ழிவ‌கை செய்து தர கேட்டதாகவும், அதற்கு 40 லட்சம் ரூபாய் அதிகமாக ஜமீர் கேட்டதாகவும் தெரிவித்தார். அதைப் போல பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்னும் ப‌ணிக‌ளை முழுமையாக முடிக்காமல், கட்டிட பணிகள், அறைகள் இன்னும் முழுமை பெறாத நிலையில், கான்கிரீட் பில்லர் சரியாக அமைக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து வேறு ஒரு கட்டிட பொறியாளரிடம் கேட்ட போது தான் கொடுத்த பணத்திற்கு பாதி கூட செலவு வந்திருக்காது என தெரிவித்ததாக அவர் தெரிவித்தார்.

மேலும் ஜமீர் கட்டியுள்ள வீட்டின் சுவர்கள், அஸ்திவாரம், மாடிப்படிகள் அனைத்தும் தரம் இல்லாமல் இடிந்து விழும் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார், இதனை தொடர்ந்து  ஜமீரிடம் கேட்ட போது தன்னை மிரட்டி பேசியதாகவும், அவரின் உறவினரான உசேன் மூல‌ம் முன்னாள் எம்பி பெயரை கூறி பணம் கேட்டு மிரட்டி  வருவ‌தாக‌வும் தெரிவித்தார். தொடர்ந்து தான் கஷ்டப்பட்டு உழைத்த பணம் தற்போது வீணாகி இருப்பதை கண்டு மிகவும் மன வேதனை அடைவதாகவும் இது குறித்து கேட்க போனால் தொடர்ந்து அவர்கள் தன்னை மிரட்டியும், த‌ன் மீது வீண் வதந்திகளை பரப்பி வருவதாகவும் தெரிவித்தார். தான் கஷ்டப்பட்டு உழைத்த பணம் எங்கும் போகாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளதாகவும் நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்ப்ப‌தாக‌வும் தெரிவித்தார். மேலும் தான் முறையாக அனுமதி பெற்று கட்டிடம் கட்டி வருவதாகவும், அரசு விதிமுறைகளை மீற வில்லை எனவும் தெரிவித்தார். ஜேசிபி மற்றும் பாறைகள் உடைத்தது குறித்து கேட்டதற்கு அது கட்டிட ஒப்பந்தகாரரின் பணி அதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை எனவும் கேஜிஎப் பட வில்லன் ராமச்சந்திர ராஜுவுடன் ஜமீரை சந்தித்து அவர்களை மிரட்டியதால் உங்கள் இருவர் மீதும் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது .இது குறித்து கேட்ட போது அது தனக்கு தெரியாது எனவும், வாடகைக்கு அறை கேட்கவே அங்கு சென்றதாகவும், நாங்கள் யாரையும் மிரட்ட வில்லை என தெரிவித்ததும் குறிப்பிட‌த்த‌க்க‌து.

மேலும் படிக்க | காங்கிரஸா? திமுகவா? என்ற குழப்பத்தில் இருக்கிறார் கமல் - அண்ணாமலை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News