₹ 1264 கோடி செலவில், மதுரை தோப்பூரில் AIIMS மருத்துவமனை!

மதுரை தோப்பூரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது!

Last Updated : Dec 18, 2018, 09:43 AM IST
₹ 1264 கோடி செலவில், மதுரை தோப்பூரில் AIIMS மருத்துவமனை! title=

மதுரை தோப்பூரில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது!

மத்திய அரசு ஒப்புதல் அளித்த பின் 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தற்போது மதுரை தோப்பூரில் 1264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 750 படுக்கைகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இதேப்போன்று தெலங்கானா மாநிலம் பிபிநகரிலும் 1028 கோடி ரூபாய் மதிப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த தகவலை பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பக்கத்தின் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சரவைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

புதிகாக அமைக்கப்படும் ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையிலும் சுமார் 3000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் நட்டா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனையில் 100 எம்பிபிஎஸ் இடங்களும், 60 பிஎஸ்சி நர்சிங் இடங்களும் இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Trending News