கோவை: ’அண்ணாமலையின் பித்தலாட்டம்’ சொத்து மதிப்பை பட்டியல் போட்ட கார்த்திகேய சிவசேனாதிபதி

karthikeya sivasenathipathy exposed Annamalai's drama: அண்ணாமலை சமூகநீதிக்கு மிகப்பெரிய எதிரியாக உள்ளார் என விமர்சித்துள்ளார் திமுகவின் அயலக நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி. அண்ணாமலை வண்டி டெல்லிக்கும் போகாது, தாமரையும் மலராது என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 8, 2024, 06:48 PM IST
  • அண்ணாமலை சொல்வதெல்லாம் பொய்
  • அவர் பல ஏக்கர் சொத்துகளை வைத்திருக்கிறார்
  • அண்ணாமலை சமூக நீதிக்கு எதிரி என சிவசேனாதிபதி விமர்சனம்
கோவை: ’அண்ணாமலையின் பித்தலாட்டம்’ சொத்து மதிப்பை பட்டியல் போட்ட கார்த்திகேய சிவசேனாதிபதி title=

கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி

கோவை நாடாளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாதிபதி பேட்டி அளித்தார். அபபோது அவர் பேசுகையில், " கோவையில் 2021க்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டத்தால், போராட்டம் இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். சேலம் - சென்னை நெடுஞ்சாலை, ஸ்டெர்லைட் உள்ளிட்ட போராட்டங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.10 ஆண்டு காலமாக தமிழ்நாட்டை பாஜக வஞ்சிக்கிறது. ஒன்றிய அரசுக்கு 1 ரூபாய் வரியாக கொடுத்தால், திரும்ப 29 பைசா தருகிறார்கள். 71 பைசாவை திருடி விடுகிறார்கள். பாஜக-வின் தில்லாலங்கடி அரசியலால் குஜராத் பணக்காரர்கள் பெரும் பலன் அடைந்து வருகின்றனர். இந்தியாவில் அதிக முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கோவையை பொறுத்தவரை 20 கிமீக்கு ஒரு தொழில் உள்ளது. 

மேலும் படிக்க | பிரதமர் மோடி வருகை! சென்னையில் போக்குவரத்து அதிரடி மாற்றம் - தெரிஞ்சுக்கோங்க மக்களே

அண்ணாமலை மிகப்பெரிய ஆபத்து

கல்வி நிறுவனங்களில் கோவை சிறந்து விளங்கி வருகிறது. கொங்கு நாட்டில் 20 விழுக்காடு அருந்ததியர் இன மக்கள் உள்ளனர். அவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்தது திமுக அரசு. அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி உள்ளனர். ஆட்டுக்குட்டியை தூக்கிக்கொண்டு செல்லும் அண்ணாமலை அருந்ததியின மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக வந்துள்ளார். அண்ணாமலை அம்மா ஊரில் 10க்கும் மேற்பட்டவர்கள் உயர் பதவியில் உள்ளனர். ஆனால் அவர் தற்போது கல்வி முக்கியமில்லை என்று கூறுகிறார். கல்விக்கும், சமூக நீதிக்கும் மிகப்பெரிய எதிரியாக அண்ணாமலை உள்ளார். கலைஞர் கொடுத்த ஓபிசி பிரிவு கோட்டாவில் படித்து ஐபிஎஸ் ஆனவர் அண்ணாமலை. 

பொய் பேசும் அண்ணாமலை

அவரது குடும்பத்தினருக்கு பல ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. 2 தகர பெட்டியுடன் கோவை வந்தேன் என்று அவர் சொல்வதை ஏற்று கொள்ள முடியாது. தமிழகத்தில் உள்ள அண்ணாமலை ரூ.5 லட்சத்துக்கு வாட்ச் கட்டி உள்ளார். அவர்களது நண்பர்கள் தனக்கு லட்ச கணக்கில் செலவு செய்கிறார் என அண்ணாமலை கூறுகிறார். இதிலிருந்தே தமிழகத்தின் வளர்ச்சி தெரிகிறது. அண்ணாமலை ஓட்டும் வண்டியும் டெல்லி போகாது. தாமரையும் மலராது. டெல்லியில் பாஜக முடிவுக்கு வர போகிறது." என விமர்சித்தார்.

வருமானவரித்துறை மீது விமர்சனம்

கோவைக்கு வரவுள்ள ஸ்டேடியம் குறித்து அண்ணாமலை விமர்சித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த கார்த்திகேய சிவசேனாதிபதி,  கோவைக்கு என்ன செய்ய வேண்டும், என்ன தேவை என்பது அரசுக்கு தெரியும். குஜராத், உத்தரபிரதேசத்துக்கும் செய்யும் மோடி தமிழ்நாட்டை கண்டு கொள்ளவில்லை. வருமான வரித்துறை அதிகாரிகள் அனைவரும் குறிப்பாக வட இந்தியாவை சேர்ந்த குறிப்பிட்ட 3 மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றார். விவேக் கொலை குற்றவாளி ஜான்பாண்டியனுக்கு பாஜக சீட்டு வழங்கியது தொடர்பான கேள்விக்கு, அண்ணாமலை தான் பதில் கூற வேண்டும் என்றார். கோவையில் உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் மைதானம் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மிகப்பெரிய வாக்கு வித்யாசத்தில் வெற்றி பெறுவார்." என்றும் கூறினார்.

மேலும் படிக்க | ’உண்மையான ஊழல் கட்சி பாஜக தான்’ ஆதாரத்தை சுட்டிக்காட்டிய தயாநிதி மாறன்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News